செய்திகள் :

`உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்’ - பதவியேற்ற 8 மணிநேரத்தில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து

post image

அமெரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்று வெள்ளை மாளிகைக்குள் மீண்டும் அதிபராக நுழைந்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அதிபராகப் பொறுப்பேற்றபின் ட்ரம்ப் தனது முதல் உரையில், ``அமெரிக்காவில் ஆண், பெண் என்ற இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும்." என்று கூறினார். இந்த நிலையில், அதிபராகப் பொறுப்பேற்ற அடுத்த 8 மணிநேரத்தில், உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார்.

மேலும், ``கோவிட் 19 தொற்றுநோயை உலக சுகாதார அமைப்பு தவறாகக் கையாண்டது. உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிவிட்டது. அதோடு, அமெரிக்காவிடமிருந்து அதிக நிதியைக் கோரியது." என்று விலகலுக்கான காரணங்களை ட்ரம்ப் பட்டியலிட்டார்.

ட்ரம்ப் இவ்வாறு செய்வது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே, அதிபராகப் பதவி வகித்தபோது 2020-ல், கொரோனா பெருந்தொற்றில் உலக சுகாதார அமைப்பின் அணுகுமுறையை விமர்சித்து, அமெரிக்காவின் நிதியை நிறுத்துவதாக அச்சுறுத்தினார். அதன்படி, 2020 ஜூலையில் உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுவதற்கான முறையான நடவடிக்கையை எடுத்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

இருப்பினும், அந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவர் தோற்றதால் அது நடைமுறையாகவில்லை. இத்தகைய சூழலில்தான், தான் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றதும் மீண்டும் அதே உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திருக்கிறார். இதேபோல், தன்னுடைய முதல் ஆட்சிக்காலத்தில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த ட்ரம்ப், பைடன் ஆட்சியில் அமெரிக்கா மீண்டும் இணைந்ததால், தற்போது அதிபரானதும் அதே உத்தரவில் மீண்டும் கையெழுத்திட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

'புஸ்ஸி ஆனந்தை மட்டும் வைத்துக்கொண்டு விஜய் ஒன்னும் பண்ண முடியாது' - எஸ்.வி.சேகர் சொல்வதென்ன?

விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் பேசியிருக்கிறார்.பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தவெக தலைவர் விஜய் நேற்று( ஜனவரி 20) போராட்டம் நடத... மேலும் பார்க்க

AIPOC: அனைத்திந்திய சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடு; வெளிநடப்பு செய்த அப்பாவு! - காரணம் என்ன?

1921-ம் ஆண்டு முதல் நடந்துவரும் அனைத்திந்திய சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடின் (AIPOC) 85-வது மாநாடு பீகார் மாநிலம், பாட்னாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங... மேலும் பார்க்க

IIT: "காமகோடியை தலைவர் பதவியிலிருந்து நீக்குக" - கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சென்னை IIT இயக்குநர் காமகோடி சில நாட்களுக்கு முன்பு மாட்டுப்பொங்கல் விழாவில் பசுவின் கோமியம் ஆண்டி-பாக்டீரியல் என்றும் அதன் மருத்துவ குணம் பற்றியும் பேசியிருந்தது பெரும் விவாதமாக எழுந்துள்ளது. நாட்டின... மேலும் பார்க்க

Mahatma Gandhi: ``காந்தி கொலையை ஏற்பாடு செய்தது நேரு" - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு

சுதந்திர இந்தியாவின் தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி, நாடு சுதந்திரமடைந்த ஆறாவது மாதத்திலேயே நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். வரலாற்றிலும் இதுவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலை... மேலும் பார்க்க

Donald Trump: `அமெரிக்காவில் இனி ஆண், பெண் என இருபாலர் மட்டுமே' - அதிபராக முதல் உரையில் ட்ரம்ப்

டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை வீழ்த்தி இரண்டாவது முறையாக மீண்டும் அதிபராக வெற்றிபெற்றார். அதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெர... மேலும் பார்க்க