செய்திகள் :

பெங்களூரில் டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது!

post image

பெங்களூரில் கடந்த ஆண்டு நவம்பரில் டிஜிட்டல் கைது மோசடி மூலம் மென்பொருள் பொறியாளரிடம் ரூ.11.8 கோடி மோசடி செய்த மூவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் தவல் பாய் ஷா (34) அகமதாபாத்திலிருந்து கைது செய்யப்பட்டார், தருண் நடனி(24) மற்றும் கரண் ஷம்தாசனி (28) ஆகியோர் ஜனவரி 10-ஆம் தேதி மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் உள்ள உலாஸ்நகரில் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில்,

பாதிக்கப்பட்டவர் மென்பொருள் பொறியாளர் விஜய் குமார்(39). ஒரு மாதமாக 'டிஜிட்டல் கைது' செய்யப்பட்டார். மோசடி செய்பவர்கள் காவல்துறை அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து பணமோசடிக்காக வங்கிக் கணக்குகளைத் திறக்க பாதிக்கப்பட்டவரின் ஆதார் அட்டையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். கடந்த நவம்பர் 25 முதல் டிசம்பர் 12 வரை இந்த மோசடி நடந்துள்ளது.

நவம்பர் 11-ம் தேதி, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) அதிகாரி என்று கூறிக் ஒரு நபரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், மேலும், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட தனது சிம் கார்டு, சட்டவிரோத விளம்பரங்களுக்கும், துன்புறுத்தும் செய்திகளுக்கும் பயன்படுத்தப்பட்டதாக அந்த நபர் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக மும்பையின் கொலாபா சைபர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோசடியில் ஈடுபட்டவர்கள் மிரட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவரிடம் மொத்தம் ரூ.11.7 கோடி கையாடல் செய்தனர். மேலும் மோசடியில் ஈடுபட்டவர்கள் இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்குமாறும், ஒத்துழைக்கவில்லை என்றால், கைது செய்யப்படுவதாகவும், உடல் ரீதியாக துன்புறுத்தப்படுவார். மேலும் குடும்பத்தினர் கைது செய்யப்படுவர் என்று மிரட்டியுள்ளார். இருப்பினும், மோசடி கும்பல் தொடர்ந்து அதிகப் பணம் கேட்கத் தொடங்கிய நிலையில், ​​​​பாதிக்கப்பட்டவர் மோசடி செய்பவர்களுக்கு இரையாகிவிட்டதை உணர்ந்து காவல்துறையில் புகார் அளித்தார்.

தனிப்படை அமைத்து டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்ட மூவரை போலீஸார் கைது செய்தனர். குற்றவாளிகளின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.3.7 கோடி கைப்பற்றப்பட்டதாகவும், அதே நேரத்தில் அவர்களது கும்பலைச் சேர்ந்த மீதமுள்ளவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்தக் கும்பலின் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபர், துபையில் இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக மேலும் விரிவான விசாரணை நடைபெற்று வருகின்றது.

எதிர்கால முதல்வர் நீங்கள்தான்! -அமைச்சர் கைகாட்டிய நபர் யார்?

ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நர லோகேஷ் ஆந்திர பிரதேசத்தின் முதல்வராவார் என்று பேசியுள்ளார் அம்மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் டி. ஜி. பரத். ஆந்திர பிரதேச முதல்வர்... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: 699 வேட்பாளர்கள் களத்தில் போட்டி!

70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்குப் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் 699 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட உள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக 2020-ல் நடைபெற்ற தில்லி பேரவைத் தேர்... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

நடிகர் சைஃப் அலிகான் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளார்.மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபல பாலிவுட் நடிகர் சைஃப்... மேலும் பார்க்க

அசாமில் இரண்டாவது நபருக்கு எச்எம்பிவி தொற்று!

அசாமின் குவஹாத்தியில் 75 வயது பெண்ணுக்கு மெட்டாப்நியூமோவைரஸ் (எச்.எம்.பி.வி) தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்கு அடுத்ததாக சீனாவில் இருந்து குழந்தைகளைத் தாக்கக்கூடிய எச்எம்பிவி... மேலும் பார்க்க

அமெரிக்க துணை அதிபர் எனக்கு பேரன் முறை உறவு.. ஆந்திர பெண்மணி நெகிழ்ச்சி!

விசாகப்பட்டினம் : அமெரிக்காவின் 50-ஆவது துணை அதிபராக ஜே. டி. வான்ஸ் திங்கள்கிழமை(ஜன. 20) பதவியேற்றுக் கொண்டார். ஜே. டி. வான்ஸின் மனைவி உஷா சிலுகுரி ஆந்திர பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர். அவரின் உறவி... மேலும் பார்க்க

திருப்பதி அன்னப்பிரசாத மெனுவில் புதிய உணவு! ஆனால்..

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மூலம், பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அன்னப்பிரசாதத்தில், புதிய உணவு ஒன்று சேர்கிறது. இதனால் பக்தர்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருமலை திருப்பதி தேவஸ்தானத்தி... மேலும் பார்க்க