செய்திகள் :

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்: காஸாவில் சிறுவன் சுட்டுக்கொலை!

post image

இஸ்ரேல் - காஸா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் காஸாவில் சிறுவனைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு காஸா பகுதியில் உள்ள ரஃபாவைச் சேர்ந்த பாலஸ்தீனச் சிறுவனை மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று (ஜன. 20) துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளது.

இஸ்ரேல் - காஸா இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த ஞாயிறன்று (ஜன. 21) நடைமுறைக்கு வந்த நிலையில் இஸ்ரேல் அந்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | அமெரிக்காவுடன் கைதிகள் பரிமாற்றம்: தலிபான் அரசு அறிவிப்பு!

இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்தக் காணொளியில் சுடப்பட்ட சிறுவனைக் காப்பாற்ற வந்த ஒரு நபரும் துப்பாக்கியல் சுடப்படுவது பதிவாகியுள்ளது. இதனால், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் சிறுவன் பலியானது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் அரசு அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.

நேற்று (ஜன. 20) காஸாவில் இருந்து மூன்று இஸ்ரேலியக் கைதிகள் விடுவிக்கப்பட்டு, அதற்கு பதிலாக 90 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்டனர்.

காஸாவில் 46000 -க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட இந்தப் போர் முடிவடைந்ததை எண்ணி மக்கள் பெருமூச்சு விடும் நேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் உலகளவில் கண்டனங்களைப் பெற்றுள்ளது.

இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விருப்பம்: ஐரோப்பிய யூனியன் தலைவா்

டாவோஸ்: ‘உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்புகிறேன்’ என ஐரோப்பிய யூனியன் தலைவா் உா்சுலா வான்டொ்லீயென் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். மேலும் தனது இரண்டாவது பதவிக்காலத்த... மேலும் பார்க்க

மேற்குக் கரை: ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதல்

ரமல்லா: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்புடன் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலும், மேற்குக் கரை பகுதியிலுள்ள ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடவடிக்கையில் ... மேலும் பார்க்க

சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தைவானில் 27 போ் காயம்

தைபே: தைவானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 27 போ் காயமடைந்தனா்; சில இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்தன. ரிக்டா் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவான அந்த நிலநடுக்கம், சியாயி மாவட்டத... மேலும் பார்க்க

இந்தோனேசியா: மழை வெள்ளத்தில் 17 போ் உயிரிழப்பு

ஜகாா்த்தா: இந்தோனேசியாவின் முக்கியத் தீவான ஜாவாவில் திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 17 போ் உயிரிழந்தனா். மழையால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு கரைகளை உடைத... மேலும் பார்க்க

18,000 இந்தியா்கள் நாடு திரும்புவாா்கள்?: அமெரிக்க அதிபா் டிரம்ப் கட்டுப்பாடு எதிரொலி

வாஷிங்டன்/புது தில்லி: அமெரிக்காவில் பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள அனைவரையும் நாடு கடத்தும் கொள்கையைக் கட... மேலும் பார்க்க

துருக்கி ஹோட்டலில் தீவிபத்து: 66 போ் உயிரிழப்பு

அங்காரா: துருக்கியில் 12 அடுக்கு மாடி ஹோட்டல் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 66 போ் உயிரிழந்தனா்; 51 போ் காயமடைந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் வடமேற்குப் பகுதிய... மேலும் பார்க்க