செய்திகள் :

தில்லி தேர்தல்: 699 வேட்பாளர்கள் களத்தில் போட்டி!

post image

70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்குப் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் 699 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட உள்ளனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக 2020-ல் நடைபெற்ற தில்லி பேரவைத் தேர்தலில் 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதுதொடர்பாக தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரியின் கூற்றுப்படி,

பாஜகவின் பர்வேஷ் வர்மா மற்றும் காங்கிரஸின் சந்தீப் தீக்ஷித் ஆகியோருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கேஜரிவால் தீவிரப் போட்டியில் ஈடுபட்டுள்ள புதுதில்லியில் அதிகபட்சமாக 23 வேட்பாளர்கள் உள்ளனர்.

புது தில்லியைத் தொடர்ந்து ஜனக்புரி 16 வேட்பாளர்களுடன், ரோஹ்தாஸ் நகர், காரவால் நகர் மற்றும் லக்ஷ்மி நகர் ஆகியவற்றில் தலா 15 வேட்பாளர்கள் உள்ளனர். மாறாக, படேல் நகர் மற்றும் கஸ்தூரிபா நகர் ஆகிய இடங்களில் தலா ஐந்து பேர் வீதம் குறைந்த எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் உள்ளனர்.

2020ல் பட்டியலின வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட படேல் நகர் தொகுதியில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான போட்டியாளர்கள் வெறும் நான்கு பேர் மட்டுமே களத்தில் போட்டியிட்டனர்.

70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 38 தொகுதிகளில் 10க்கும் குறைவான வேட்பாளர்கள் உள்ளனர். திலக் நகர், மங்கோல்புரி மற்றும் கிரேட்டர் கைலாஷ் போன்ற குறிப்பிடத்தக்க சட்டமன்ற தொகுதிகளில் தலா 6 வேட்பாளர்களும், சாந்தினி சௌக், ராஜேந்திர நகர் மற்றும் மாளவியா நகர் ஆகிய தலா 7 பேரும் போட்டியிடுகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் 70 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன, பாஜக 68இல் போட்டியிடுகிறது, அதன் கூட்டணிக் கட்சிகளான ஜனதா தளம் (யுனைடெட்) மற்றும் லோக்தந்திரிக் ஜன் சக்தி கட்சிக்கு இரண்டு இடங்கள் உள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) 69 தொகுதிகளில் வேட்பாளர்களை நியமித்துள்ளது.

ஜனவரி 10ஆம் தேதி தொடங்கிய ஒரு வார கால வேட்புமனு தாக்கலில் மொத்தம் 1,522 வேட்புமனுக்களில் 981 வேட்பாளர்கள் வேட்புமனு சமர்பித்தனர்.

ஜனவரி 18 அன்று ஆய்வுக்குப் பிறகு இறுதி எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து ஜனவரி 20 அன்று திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி. பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, பிப்ரவரி 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

சத்தீஸ்கரில் 14 நக்சல்கள் சுட்டுக்கொலை.. நக்சல் தளபதி, தலைக்கு ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டவரும் பலி!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் மாவட்டத்தில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட 14 நக்சலைட்டுகளில், தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்படிருந்த ராம் என்கிற சல... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி தொண்டர்களை மிரட்டுகிறது பாஜக: அதிஷி

தில்லியில் ஆம் ஆத்மி கட்சித் தொடர்களை பாஜக தலைவர் ரமேஷ் பிதூரியின் மருமகன் மிரட்டுவதாக முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். பாஜக தொண்டர்களுடன் சேர்ந்து மிரட்டல் விடுப்பது குறித்து கல்காஜி தொகுதி தேர... மேலும் பார்க்க

வாடிக்கையாளர்களின் நகைகளைத் திருடிய வங்கி ஊழியர்! சிபிஐ வழக்குப்பதிவு

திருப்பூரில் வாடிக்கையாளர்களின் நகைகளைத் திருடிய வங்கி ஊழியர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேவுள்ள கேத்தனூர் எஸ்... மேலும் பார்க்க

4 ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பாஜகவில் இணைவு!

தில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு சில நாள்களே உள்ள நிலையில் 4 ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர் மா்ம உயிரிழப்புகள்: ஒமர் அப்துல்லா நேரில் ஆய்வு!

ஜம்மு - காஷ்மீர் ரஜௌரி மாவட்டத்தில் 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த கிராமத்தில் முதல்வர் ஒமர் அப்துல்லா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.ரஜௌரி மாவட்டத்தில் உள்ள பதால் கிராமத்தில் கடந்த 45 நாள்... மேலும் பார்க்க

அலட்சியம் ஏற்றுக்கொள்ள முடியாது: அதிகாரிகளை எச்சரிக்கும் ஆதித்யநாத்!

மக்களின் ஒவ்வொரு பிரச்னையையும் தீர்ப்பதற்கு உத்தரப் பிரதேச அரசு தயாராக இருப்பதாகவும், யாரும் அநீதியை எதிர்கொள்ள மாட்டார்கள் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.கோரக்நாத் கோயிலி... மேலும் பார்க்க