கல்கி 2898 ஏடி - 2 படப்பிடிப்பு எப்போது?
கல்கி திரைப்படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் கடந்த ஆண்டு ஜூன் 27-ல் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
இதையும் படிக்க: காந்தாரா - 2 படப்பிடிப்புக்கு எதிர்ப்பு?
மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.
மேலும், ரூ. 1000 கோடி வரை வசூலித்து வணிக ரீதியிலும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்கும் என தயாரிப்பாளர் அஸ்வினி தத் தெரிவித்துள்ளார்.
இப்பாகம் 2027 ஆம் ஆண்டுதான் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. காரணம், முதல் பாகத்தைவிட ஏகப்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகள் இரண்டாம் பாகத்தில் இருக்கிறதாம்!