அசாமில் இரண்டாவது நபருக்கு எச்எம்பிவி தொற்று!
அசாமின் குவஹாத்தியில் 75 வயது பெண்ணுக்கு மெட்டாப்நியூமோவைரஸ் (எச்.எம்.பி.வி) தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்றுக்கு அடுத்ததாக சீனாவில் இருந்து குழந்தைகளைத் தாக்கக்கூடிய எச்எம்பிவி தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இதுதொடர்பாக அசாம் மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
முன்னதாக லக்கிம்பூரைச் சேர்ந்த 10 மாதக் குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று பாதிக்கப்பட்டு அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது.
இந்த நிலையில், 75 வயது பெண்ணுக்கு தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சோதனைகள் உட்படுத்தும்போது அவருக்கு எச்எம்பிவி தொற்று இருப்பது தெரிய வந்தது.
அசாமில் பதிவான இரண்டாவது எச்எம்பிவி தொற்று இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் இது கண்டறியப்படுகிறது, புதிதாக எதுவும் இல்லை. மனித மெட்டாப்நியூமோவைரஸ் என்பது அனைத்து வயதினருக்கும், குறிப்பாகக் குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தின் துவக்கத்தில் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய சுவாச வைரஸ்களில் ஒன்றாகும்.
இந்த வைரஸ் தொற்றானது பெரும்பாலும் 4 முதல் 5 நாள்களுக்குள் குணமாகிவிடும். சிலருக்கு தாங்களாகவே குணமடைகின்றனர் என்று அவர் கூறினார்.