செய்திகள் :

கேபிடல் கலவரத்தில் கைதான 1,500 பேருக்கு டிரம்ப் பொதுமன்னிப்பு!

post image

அமெரிக்க நாடாளுமன்றமான கேபிடலில் 2021 ஆம் ஆண்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 1,500 பேருக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்டு டிரம்ப் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார். முந்தைய அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகளை ரத்து செய்தார்.

இதனிடையே, கடந்த 2021 ஆம் ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்குதல் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 1,500 க்கும் மேற்பட்டோருக்கு பொதுமன்னிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 2021 கேபிடல் கலவரம் தொடர்புடைய நிலுவையில் உள்ள 450 வழக்குகளை ரத்து செய்ய அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம், தனக்கு ஆதரவாக 2021 ஆம் ஆண்டில் போராடி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற தேர்தல் வாக்குறுதியை முதல்நாளிலேயே டிரம்ப் நிறைவேற்றியுள்ளார்.

கேபிடல் கலவரம்

2020 அமெரிக்க அதிபர் தேர்தல் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். இதையடுத்து, ஜனவரி 6 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றம், வெள்ளை மாளிகை உள்பட வாஷிங்டன் நகரின் பல்வேறு பகுதிகளில் கலவரம் செய்தனர்.

கலவரக்காரர்களில் சிலர் ஆயுதங்களுடன் பொது சொத்துகளை சேதப்படுத்தி, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை கொடூரமாக தாக்கினர். இதில், 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த கலவர வழக்கில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இருவர் மட்டுமே குற்றத்தில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இதுவரை 1,020 பேர் குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஏற்கெனவே 1,000-க்கும் மேற்பட்டோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 700-க்கும் அதிகமானோருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டது.

தற்போது கலவரம் நடைபெற்ற அதே கேபிடல் கட்டடத்தில்தான் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற டிரம்ப், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி கையெழுத்திட்டுள்ளார்.

பனாமா கால்வாய் சர்ச்சை: டிரம்ப்பை எதிர்க்கும் பனாமா அதிபர்!

பனாமா கால்வாயைத் திரும்பப் பெறவிருப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து பனாமா கால்வாய் பனாமா நாட்டின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று பனாமா அதிபர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில... மேலும் பார்க்க

பாரீஸ் காலநிலை ஒப்பந்தம்: விலகுவதற்கான உத்தரவில் டிரம்ப் மீண்டும் கையெழுத்து

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கையெழுத்திட்டார்.கடந்த முறை அமெரிக்க அதிபராக இருந்த போதும், இந்த உத்தரவில் அவர் கையெழுத்த... மேலும் பார்க்க

முதலில் இவரைத்தான்.. துணை அதிபர் மனைவி உஷா சிலுக்குரி வான்ஸை புகழ்ந்த டிரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக முதலில் உஷா சிலுக்குரி வான்ஸைத்தான் தான் தேர்வு செய்ததாகவும், அவர் மிகவும் புத்திசாலி, ஆனால், அது சரியாக செல்லவில்லை என்று அதிபர் டொனால்... மேலும் பார்க்க

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்: காஸாவில் சிறுவன் சுட்டுக்கொலை!

இஸ்ரேல் - காஸா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் காஸாவில் சிறுவனைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு காஸா பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

அமெரிக்க அதிபருக்கே 7 கட்டுப்பாடுகள் இருக்கிறது! கார் ஓட்டக் கூடாது!

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றிருக்கிறார். அவருடன் துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் பதவியேற்றுக்கொண்டார்.வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளி... மேலும் பார்க்க

ஹிட்லர் பாணியில் எலான் மஸ்க்! என்ன நடந்தது?

ஜெர்மன் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் பாணியில் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் பொது மேடையில் வணக்கம் வைத்திருப்பது சர்ச்சையாகியுள்ளது. அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை (ஜன... மேலும் பார்க்க