`பிரபாகரன் உடனான போட்டோ எடிட்டிங் விவகாரம்' -செய்தியாளர்கள் கேள்விக்கு சீமான் கொ...
திருப்பதி அன்னப்பிரசாத மெனுவில் புதிய உணவு! ஆனால்..
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மூலம், பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அன்னப்பிரசாதத்தில், புதிய உணவு ஒன்று சேர்கிறது. இதனால் பக்தர்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகி பி.ஆர். நாயுடு இது குறித்து கூறகையில், பூண்டு, வெங்காயம் சேர்க்கப்படாத மசால் வடை தயாரிக்கப்பட்டு, அன்னபிரசாதத்துடன் வழங்கும் முறையை முயற்சித்துள்ளோம்.
முதல் முயற்சியாக, ஜனவரி 20ஆம் தேதி முதல் ஒரு நாளைக்கு 5000 மசால் வடைகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கும் திட்டம் தொடங்கியிருக்கிறது. இது நன்றாக செல்லும்பட்சத்தில், இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னப்பிரசாதமாக சாப்பாடு, சாம்பார், பொரியல் அல்லது சாப்பாடு துவையல் போன்றவற்றுடன் தற்போது மசால் வடையும் இணைந்துள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக, இந்த மசால் வடையில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கப்படாமல், பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு, உணவுடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் சுவை நன்றாக இருப்பதாக பக்தர்களும் தெரிவித்திருக்கிறார்கள். தென்னிந்திய உணவுகளில் வடைக்கு என்று எப்போதுமே தனி இடம் உண்டு. அதுபோல, திருமலை அன்னப்பிரசாதத்தையும் இன்னும் மேம்படுத்தும் வகையில் இந்த மசால் வடை அறிமுகப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.