அரசமைப்புச் சட்டத்தை வகுத்ததில் பிராமணா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த...
‘ஏழு கடல் ஏழு மலை’ அறத்தையும் ஆத்திரத்தையும் பேசும்: மாரி செல்வராஜ்
இயக்குநர் மாரி செல்வராஜ் ஏழு கடல் ஏழு மலை படம் குறித்து பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.
இயக்குநர் ராம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் ரொமேனியா நாட்டின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வு செய்யப்பட்டது.
இதையும் படிக்க: சின்ன திரை நடிகரை மணந்த லப்பர் பந்து பட நடிகை!
இப்படத்தின் கிளிம்ஸ் விடியோ, பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் படம் குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இயக்குநரின் அடுத்த படைப்பு “ஏழுகடல் ஏழுமலை” ஆதி தமிழ்சமூகத்தின் மானுட வாழ்வின் அறத்தையும் ஆத்திரத்தையும் காதலையும் கண்ணீரையும் ஒரு நவீன மாயக்கதையாக அதிரும் தண்டவாளங்களின் வழியாக பேச வருகிறது . மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்களும் ப்ரியமும்” எனக் கூறியுள்ளார்.