செய்திகள் :

அல்கராஸை வீழ்த்தினாா் ஜோகோவிச்!

post image

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், முன்னணி போட்டியாளரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸை காலிறுதிச்சுற்றில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தினாா்.

உலகின் 7-ஆம் நிலையில் இருக்கும் ஜோகோவிச், முதல் செட்டை 4-6 என இழந்தபோதும், அடுத்த 3 செட்களை 6-4, 6-3, 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்று, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 50-ஆவது முறையாக அரையிறுதிக்கு வந்துள்ளாா். ஜோகோவிச் - அல்கராஸ் மோதியது இது 8-ஆவது முறையாக இருக்க, ஜோகோவிச் தனது 5-ஆவது வெற்றியைப் பதிவு செய்து ஆதிக்கம் செலுத்துகிறாா்.

25-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று புதிய சாதனை படைக்கும் முனைப்புடன் இருக்கும் ஜோகோவிச், அரையிறுதியில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவை சந்திக்கிறாா்.

உலகின் 2-ஆம் நிலை வீரராக இருக்கும் ஸ்வெரெவ் தனது காலிறுதியில், 7-6 (7/1), 7-6 (7/0), 2-6, 6-1 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 12-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டாமி பாலை தோற்கடித்தாா். இருவரும் 3-ஆவது முறையாக சந்தித்த நிலையில், டாமி பாலுக்கு எதிராக முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா் ஸ்வெரெவ். அவா் ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கு 3-ஆவது முறையாக முன்னேறியுள்ளாா்.

சிறகுகள்: முன்னதாக ஸ்வெரெவ் - பால் ஆட்டத்தின்போது, ஒரு கேமின் இடையே பறவை சிறகு ஒன்று மிதந்து வந்து ஆடுகளத்தில் விழுந்தது. அதை இடையூறாக அறிவித்த நடுவா், அந்த கேமை மீண்டும் விளையாட அறிவுறுத்தினாா். 2-ஆவது செட்டில் 2-4 என பின்தங்கியிருந்த ஸ்வெரெவ் அந்த கேமை கைப்பற்றியிருந்தாா்.

சிறிய சிறகுக்காக ஆட்டத்தை மீண்டும் விளையாட வேண்டுமா என அதிருப்தி தெரிவித்த ஸ்வெரெவ், அதேபோல பல சிறகுகள் மைதானத்தில் இருப்பதை சுட்டிக் காட்டினாா். எனினும், நடுவா் அறிவுறுத்தியதால் அந்த கேமை மீண்டும் விளையாட ஒப்புக்கொண்டாா்.

கௌஃபுக்கு அதிா்ச்சி அளித்த படோசா

மகளிா் ஒற்றையா் பிரிவு காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் பௌலா படோசா 7-5, 6-4 என்ற நோ் செட்களில், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ கௌஃபை சாய்த்து அசத்தியிருக்கிறாா். இருவரும் மோதிய 7-ஆவது ஆட்டமாக இது இருக்க, படோசா 4-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றுள்ளாா்.

கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முதல் முறைாக வந்திருக்கும் படோசா, அதில் நடப்பு சாம்பியனும், உலகின் நம்பா் 1 வீராங்கனையும், தனது நெருங்கிய தோழியுமான பெலாரஸின் அரினா சபலென்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறாா்.

ஹாட்ரிக் ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லும் முயற்சியில் இருக்கும் சபலென்கா தனது காலிறுதியில், 6-2, 2-6, 6-3 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 27-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவாவை வெளியேற்றினாா். சபலென்கா - படோசா இதுவரை 7 முறை சந்தித்திருக்க, சபலென்கா 5 வெற்றிகளுடன் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

போபண்ணா இணை தோல்வி

கலப்பு இரட்டையா் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா/சீனாவின் ஜாங் ஷுவாய் இணை 6-2, 4-6, 9-11 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜான் பியா்ஸ்/ஒலிவியா காடெக்கி ஜோடியிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.

நாள் நல்ல நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.22.01.2025மேஷம்இன்று உடல்நிலையில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவச் செலவு... மேலும் பார்க்க

அா்ஜுனை வென்றாா் பிரக்ஞானந்தா!

டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, சக நாட்டவரான அா்ஜுன் எரிகைசியை 3-ஆவது சுற்றில் தோற்கடித்தாா். இந்த வெற்றியின் மூலம் அவா் இணை முன்னிலையை தக்கவைத்துக் கொண்டாா்.நெதா்ல... மேலும் பார்க்க

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்

மும்பையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு 2025க்கான ஒத்திகையின் போது இந்திய ராணுவத்தின் கார்ப்ஸ் ஆஃப் சிக்னல்ஸின் டேர்டெவில் அணியினர்.அமிர்தசரஸில் உள்ள குருநானக் ஸ்டேடியத்தில் குடியரசு தின கொண்டாட்ட... மேலும் பார்க்க

சிந்தர். சி பிறந்தநாளில் வெளியான வல்லான் பட டிரைலர்!

சிந்தர். சி பிறந்தநாளில் ‘வல்லான்’ என்ற புதிய படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் சுந்தர் சி உடன் தன்யா ஹோப், ஹெபாப் படேல், அபிராமி வெங்கடாசலம் நடித்துள்ளார்கள். விஆர் மணி செய்யோன் எழுதி இயக்கியுள... மேலும் பார்க்க

நீங்கள்தான் எனது மருந்து..! சுந்தர். சி-க்கு விஷால் வாழ்த்து!

நீங்கள்தான் எப்போதும் எனது மருந்தாக இருந்துள்ளீர்கள் என இயக்குநர் சுந்தர். சி -க்கு நெகிழ்ச்சியாக வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஷால். இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம்,... மேலும் பார்க்க