செய்திகள் :

சின்ன திரை நடிகரை மணந்த லப்பர் பந்து பட நடிகை!

post image

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரஞ்சனி தொடரின் நாயகன் சந்தோஷ், தனது நீண்ட நாள் காதலியான நடிகை மெளனிகாவை திருமணம் செய்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் நடித்து கவனம் பெற்றார்.

சின்ன திரையில் ஒளிபரப்பாகிவரும் ரஞ்சனி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தத் தொடரில் நடிகர் சந்தோஷ் நாயகனாக நடிக்கிறார். இதுமட்டுமின்றி இதற்கு முன்பு அண்ணா தொடரில் நடித்திருந்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஜீ தமிழில் ஒளிபரப்பான கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் நாயகனாகவும் நடித்திருந்தார். இதில், மனிஷாஜித், திவ்யா பத்மினி என இரு நாயகிகள் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர்.

இதுமட்டுமின்றி புதிய பார்வை என்ற குறும்படத்திலும் சந்தோஷ் நடித்துள்ளார். தற்போது சின்ன திரையில் நடித்துவந்தாலும் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாகியுள்ளார்.

இந்நிலையில் இவர் நடிகை மெளனிகாவை நீண்ட நாள்களாகவே காதலித்துவந்துள்ளார். பிளாக் ஷீப் யூடியூப் சேனல்களின் தொடர்களிலும், கனா காணும் காலம் தொடரிலும் மெளனிகா நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் நாயகனின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார். இந்த பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இருவரும் நடிப்புத் துறையில் தங்கள் முயற்சிகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்சென்றுகொண்டிருக்கும் நிலையில், சந்தோஷும் மெளனிகாவும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் எளிமையான முறையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இதில் கலந்துகொண்டனர். திருமண புகைப்படங்களை மெளனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காதல் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் சுசீந்திரனின் ’2கே லவ் ஸ்டோரி’... நாளை டிரைலர் வெளியீடு!

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘2கே லவ் ஸ்டோரி திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது. இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நவீன இளைஞர்களின்... மேலும் பார்க்க

மொராக்கோவின் கொடுஞ்செயல்: கால்பந்து உலகக் கோப்பைக்காக 30 லட்சம் தெருநாய்களை கொல்ல திட்டம்!

கால்பந்து உலகக் கோப்பைக்காக 30 லட்சம் தெருநாய்களை கொல்ல மொராக்கோ திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலால் விலங்கு ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். 2030ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்ட... மேலும் பார்க்க

ரூ. 50 கோடி வசூலை நெருங்கிய மத கஜ ராஜா!

மத கஜ ராஜா திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் கடந்த 2... மேலும் பார்க்க

சேகர் கமூலாவை வியப்பில் ஆழ்த்திய தனுஷ்!

நடிகர் தனுஷ் குறித்து இயக்குநர் சேகர் கமூலா பேசியுள்ளார்.நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர். தேவி... மேலும் பார்க்க

மாரி தொடரிலிருந்து விலகும் நாயகி ஆஷிகா!

மாரி தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை ஆஷிகா அத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2022 ஜூலை முதல் மாரி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆஷிகா கோபால் படுகோனே நாயகியா... மேலும் பார்க்க