போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்: காஸாவில் சிறுவன் சுட்டுக்கொலை!
மழையால் அதிக ஈரப்பதமான நெற்பயிர்கள்: மத்தியக் குழு தமிழகம் வருகை!
வடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் அதிக ஈரப்பதமான நெற்பயிர்களை ஆய்வு செய்ய மத்திய அதிகாரிகள் குழு தமிழகம் வரவுள்ளது.
தமிழ்நாட்டில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழையால் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் அதிக ஈரப்பதம் ஆகியுள்ளன. கடந்த ஒரு வாரமாகவும் அங்கு மழை பெய்து வருவதால் நெல்லினை உலரவைக்க முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனால், அதிக ஈரப்பதத்தில் உள்ள நெல்பயிர்களை அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள், மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிக்க | காரைக்குடியில் வளர் தமிழ் நூலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!
இதனால், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தற்போது 17% ஈரப்பதத்தில் உள்ள நெல் கொள்முதல் என்பதைத் தளர்வு செய்து 22% வரை ஈரப்பதம் உள்ள நெற்பயிர்களை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது.
இதையடுத்து அதிக ஈரப்பதமான நெற்பயிர்களை ஆய்வு செய்ய மத்திய அரசின் அதிகாரிகள் தமிழகம் வரவுள்ளன.
மத்திய உணவு அமைச்சகத்தின் 2 உதவி இயக்குனர்கள், 2 தொழில்நுட்ப இயக்குனர்கள் தமிழகம் வந்து ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்பதன் அடிப்படையில் இதற்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.