உழைப்புக்கு அன்பு கிடைக்குமா? விடியோ வெளியிட்ட முத்துக்குமரன்
திரு. மாணிக்கம் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான திரு.மாணிக்கம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்து வெளியான திரைப்படம் திரு.மாணிக்கம். இவருக்கு ஜோடியாக ‘நாடோடிகள்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அனன்யாவும் பிரதான பாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
‘சீதா ராமம்’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: மீண்டும் குடிபோதையில் ரகளை செய்த விநாயகன்! நடிக்க தடை விதிக்கப்படுமா?
இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில், திரு.மாணிக்கம் படம் ஜீ5 தமிழ் ஓடிடி தளத்தில் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.