Kumbh Mela: கும்பமேளாவில் மாலை விற்ற பெண் யூடியூப் பிரபலமான கதை; யார் இந்த வைரல்...
வள்ளுவர், வள்ளலாரை களவாட ஒரு கூட்டமே சதி செய்கிறது: முதல்வர் ஸ்டாலின்
வள்ளுவர், வள்ளலாரை களவாட ஒரு கூட்டமே சதி செய்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பழனியப்ப செட்டியாா் நினைவு கலையரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வளா் தமிழ் நூலகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வா் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறாா்.
இதற்காக திருச்சியிலிருந்து சாலை வழியாக காரைக்குடிக்கு செவ்வாய்க்கிழமை வந்த முதல்வர், அழகப்பா பல்கலைக்கழகத்தில் பழனியப்ப செட்டியார் நினைவு கலையரங்க வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த நிதி ரூ.12 கோடியில் கட்டப்பட்ட லட்சுமி வளா் தமிழ் நூலகத்தை திறந்து வைத்தார்.
பின்னா், பல்கலைக்கழக நிர்வாக அலுவலகக் கட்டடத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவா் உருவச் சிலையைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை:
”குறள் நெறி பின்பற்றப்பட்டால்தான் தமிழகமும் காப்பாற்றப்படும், உலகமும் காப்பற்றப்படும். அப்படி காப்பாற்றப்பட வேண்டுமென்றால், வள்ளுவரை கபளீகரம் செய்யாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
வள்ளுவர், வள்ளலார் போன்ற சமத்துவத்தைப் பேசிய மாமனிதர்களைக் களவாட ஒரு கூட்டமே சதி செய்துகொண்டு இருக்கிறது. அதற்கு எதிரான காவல் அரணாக ஒவ்வொரு தமிழனும் இருக்க வேண்டும்.
உயர்கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 35 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரி சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 34 விழுக்காடாக உயர்ந்துள்ளது” எனப் பேசினார்.