செய்திகள் :

உலகின் மிகச் சிறந்த வீரர் கோலி: கங்குலி

post image

உலகின் மிகச் சிறந்த வெள்ளைப் பந்து வீரராக விராட் கோலி இருப்பதாக இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்திய அணிக்கான போட்டிகள் தவிர்த்து, மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளன. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், மேற்கு வங்க கிரிக்கெட் வாரியம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிசிசிஐ முன்னாள் தலைவர், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கங்குலி, சாம்பியன்ஸ் டிராபி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஃபார்ம் குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிக்க : லக்னௌ கோப்பை வெல்ல 200 சதவீதம் உழைப்பேன்: புதிய கேப்டன் ரிஷப் பந்த்

”விராட் கோலி வாழ்நாள் சாதனை படைத்த சிறந்த வீரர். 81 சதங்களை அடிப்பது என்பது நம்பமுடியாத ஒன்று. அவர் உலகின் மிகச் சிறந்த வெள்ளைப் பந்து வீரர்.

ஒவ்வொரு வீரருக்கும் பலமும் பலவீனமும் இருக்கும். சிறந்த பந்துவீச்சாளர்களுடன் விளையாடும்போது உங்கள் பலவீனங்களுக்கு ஏற்ப நீங்கள் எவ்வாறு மாறுகிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

இந்திய சூழலில் நிறைய ரன்கள் கோலி எடுப்பார், இன்னும் அவரின் கிரிக்கெட் பயணம் மீதமுள்ளது என்று நான் நினைக்கிறேன். இங்கிலாந்து சுற்றுப்பயணம் அவருக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும்.

சாம்பியன்ஸ் டிராபி பற்றி எந்த கவலையும் இல்லை. உலகின் மிகச் சிறந்த வெள்ளைப் பந்து வீரராக கோலி இருக்கிறார்.

ஆஸ்திரேலிய பயணத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என்று தெரியும். ஆனால், கடைசி இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில், டி20 இல் தோல்வியே பெறாமல் வென்றது. ஒருநாள் கோப்பையில் இறுதிப் போட்டியில் மட்டுமே இந்தியா தோற்றது.

இந்திய அணி சிறந்த வெள்ளை பந்து அணியாக இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை சாம்பியன்ஸ் டிராபியின் சிறந்த அணி இந்தியாதான்.

ரோஹித் சர்மா அற்புதமான வெள்ளை பந்து வீரர். சாம்பியன்ஸ் டிராபி தொடங்கியதும் நீங்கள் வித்தியாசமான ரோஹித்தை பார்ப்பீர்கள்.

முகமது ஷமியின் உடல்தகுதி மகிழ்ச்சி அளிக்கிறது. பும்ராவுக்கு அடுத்து நாட்டின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக ஷமி உள்ளார். நீண்ட நாள்களுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாடுவதால், அவர் கொஞ்சம் பதட்டமாக இருப்பார் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் வங்காள அணிக்காக நிறைய பந்துகள் வீசினார், இது வரவிருக்கும் போட்டிகளில் அவருக்கு உதவும்” எனத் தெரிவித்தார்.

கோலியுடனான மோதலால் எந்த வருத்தமும் இல்லை: கான்ஸ்டாஸ்

ஆஸி. வீரர் சாம் கான்ஸ்டாஸ் விராட் கோலியுடனான சண்டை குறித்து பேசியுள்ளார். பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸி. அணி 3-1 என வெற்றி பெற்றது. இதில் கோலி - கான்ஸ்டாஸ் உடன் மோதலில் ஈடுபட்டார். 19 வயதான கான்ஸ்டாஸ் ... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்!

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையை அண்மையில் ஐசிசி வெளியிட்டது. அயர்லாந்துக்கு ... மேலும் பார்க்க

மகளிர் உலகக் கோப்பை: 3 ஓவருக்குள் மலேசியாவை வீழ்த்தி இந்தியா அபாரம்!

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் மலேசியாவை 3 ஓவருக்குள் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இ... மேலும் பார்க்க

இந்திய அணிக்காக விளையாட எந்தவொரு காயத்திலிருந்தும் மீண்டு வரலாம்: முகமது ஷமி

இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எந்தவொரு காயத்திலிருந்தும் எந்த நேரத்திலும் மீண்டு வரலாம் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்க... மேலும் பார்க்க

கௌதம் கம்பீருக்கு இங்கிலாந்து பயிற்சியாளர் புகழாரம்!

இந்திய அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உதவுவார் என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து அணி இந்தியாவில் சு... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவிடம் இதனை கற்றுக் கொண்டேன்; மனம் திறந்த ரிஷப் பந்த்!

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த், கேப்டன் ரோஹித் சர்மா குறித்து மனம் திறந்துள்ளார்.லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் ஐபிஎல் மெகா ஏலத்தில், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலத்தில் ... மேலும் பார்க்க