செய்திகள் :

Doctor Vikatan: 4 கிலோ எடையில் பிறந்த குழந்தை... பின்னாளில் உடல்பருமன் பிரச்னை வருமா?

post image

Doctor Vikatan: எனக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. குழந்தை 4 கிலோ எடையில் பிறந்தது.  இது நார்மல் எடைதானா... குழந்தைகள் அதிக எடையில் பிறப்பது ஏன்... இதனால் பிற்காலத்தில் அவர்கள் உடல் பருமன் பிரச்னைக்கு ஆளாவார்களா?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
  

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

2.5 கிலோ முதல் 3.5 கிலோ வரை இருந்தால் பிறக்கும் குழந்தை சராசரி எடையில் இருப்பதாக தெரிந்துக் கொள்ளலாம். அந்த எடையானது குழந்தையின் அம்மா- அப்பாவின் உடல் அமைப்புக்கேற்ப மாறுபடலாம். உதாரணத்துக்கு, குழந்தையின் பெற்றோர் இருவருமே உயரமாக இருக்கும்பட்சத்தில், குழந்தையின் நீளமும் சற்று அதிகமிருக்கும். அதனால் எடையும் சற்று அதிகமிருக்கும்.  குழந்தையின் உயரத்தையே நாம் நீளம் என்று குறிப்பிடுகிறோம்.  சில குழந்தைகளுக்கு  நீளமானது சாதாரணமாக இருந்து, எடை மட்டும் அதிகமாக இருக்கலாம். இந்த மாதிரி குழந்தைகளுக்கு பிற்காலத்தில் பிரச்னைகள் வரக்கூடும். வளர்ந்த பிறகு இந்தக் குழந்தைகள் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு.

சாதாரண உயரம் மற்றும் எடையில் உள்ள பெற்றோருக்கு, எடை அதிகமான குழந்தை பிறக்க பல காரணங்கள் இருக்கலாம். கர்ப்பகாலத்தில் தாய்க்கு ஏற்படும் நீரிழிவு அதில் முதன்மையானது.  கர்ப்பகால நீரிழிவு ஏற்படவும் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் மிக முக்கியமானது, லைஃப்ஸ்டைல். தாயின் உணவுப்பழக்கம் முறையற்று இருப்பதுதான் காரணம்.

கர்ப்பகால நீரிழிவு ஏற்படவும் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் மிக முக்கியமானது, நம் லைஃப்ஸ்டைல்.

கார்போஹைட்ரேட் அதிகமாகவும் புரதச்சத்து குறைவாகவும் உள்ள உணவுகளைச் சாப்பிடுவது, உடற்பயிற்சிகளே இல்லாதது, கர்ப்பமாவதற்கு முன்பே உடல் பருமன் அதிகமாக இருந்தது, அதைக் குறைக்காமலேயே கர்ப்பம் தரித்தது, கர்ப்பம் தரித்த பிறகும் எடை அதிகரித்துக்கொண்டே போவது... இவையெல்லாம் கர்ப்பகால நீரிழிவுக்கான காரணங்களாக மாறலாம். கர்ப்பகாலத்தில் தாய்க்கு நீரிழிவு இருந்தால், குழந்தை அதிக எடையுடன் பிறக்கக்கூடும். அப்படிப் பிறக்கும் குழந்தைக்கு பிற்காலத்தில் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள் வரலாம். உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்படலாம்.

ஒருவேளை இப்படி ஏதோ காரணத்தால் குழந்தை சராசரியைவிட அதிக எடையில் பிறந்துவிட்டாலும் கவலைப்பட வேண்டாம். குழந்தைக்கு தாய்ப்பாலை பிரதான உணவாகக் கொடுக்க வேண்டும். மாட்டுப்பால், பவுடர் பால் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால்

குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். உடற்பயிற்சிகள் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்த வேண்டும். பிஸ்கட், சாக்லேட், கேக், பஃப்ஸ், ரஸ்க் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினால் குழந்தை வளர்ந்த பிறகு உடல் பருமனால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியும்.

சில குழந்தைகள் பிறக்கும்போது எடை குறைவாகப் பிறப்பார்கள். இதை 'ஃபீட்டல் குரோத் ரெஸ்ட்ரிக்ஷன்' (Fetal growth restriction) என்று சொல்வோம். இப்படிப் பிறக்கும் குழந்தைகளுக்கும் பிற்காலத்தில் நீரிழிவு, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதைத்தான் 'த பார்க்கர் ஹைப்போதெசிஸ்' (The Barker hypothesis ) என்று சொல்கிறோம். எனவே, அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும், சராசரியைவிட குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் பிற்காலத்தில் வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடைய பிரச்னைகள் வரலாம்.

அதிக எடையுடன் பிறக்கும் குழந்தை...

அதைத் தவிர்க்க, கர்ப்ப காலத்தில் அம்மாக்கள் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன்பே தன்னுடைய உடல் எடையில் அக்கறை செலுத்த வேண்டும். கர்ப்பம் தரித்த பிறகும் அதைக் கண்காணிக்க வேண்டும். இவற்றை எல்லாம் சரியாகப் பின்பற்றினாலே, குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறப்பார்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

``காலாவதி பதவியும், விலகல் கடிதமும்'' -வேலூரில் பாஜக மோதல்... பின்னணி என்ன?

பா.ஜ.க-வில், வேலூர் மாவட்டத்திற்கான புதிய தலைவராக தசரதன் என்பவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.இதற்கான அறிவிப்பை மாநில துணைத் தலைவர் சக்ரவர்த்தி நேற்று மாலை வெளியிட்டார். இதனிடையே, தசரதன் நியமனத்திற்க... மேலும் பார்க்க

IIT இயக்குநர் சர்ச்சை கருத்து: ``கல்வி நிலையங்கள் காவி மயமாகுவதை..." -காங்கிரஸ் செல்வப்பெருந்தகை!

மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம... மேலும் பார்க்க

Tiktok: 14 மணி நேரத்தில் தடையை நீக்கிய டிரம்ப்; நன்றி தெரிவித்த டிக் டாக்..!

'அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது' என்று ஆரம்பித்து 'மக்களின் தகவல்களை திருடுகிறார்கள்' என்பது வரை சென்று அமெரிக்காவில் டிக் டாக் ஆப்பிற்கு தடை கொண்டுவரப்பட்டது. இது 170 மில்லியன் அமெ... மேலும் பார்க்க

Ambani: அமெரிக்க அதிபராக ட்ரம்ப்; தொடக்க விழாவில் அம்பானி குடும்பம்! - வைரலாகும் புகைப்படம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க நேரப்படி (20-ம் தேதி) 47-வது அதிபராக இன்று பதவியேற்கிறார். அமெரிக்கா அதிபராக இரண்டாவது முறை ட்ரம்ப் பதவியேற்கும் இந்த நிகழ்வு உலக அரங்... மேலும் பார்க்க

Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் ABC மால்ட் (ABC Malt)... எல்லோருக்கும் ஏற்றதா?

Doctor Vikatan: சமீபகாலமாக சோஷியல் மீடியாவில் ABC மால்ட் என ஒரு ஹெல்த் டிரிங்க் பிரபலமாகி வருகிறது. ஆப்பிள், பீட்ரூட், கேரட் சேர்த்தபவுடர் என்றும் அதை பாலில் கலந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கு... மேலும் பார்க்க

பிரபாகரனுடன் சீமான்: ``இதை எடிட் பண்ணிக் கொடுத்ததே நான் தான்..'' -இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் கட்சித் தொடங்கியதிலிருந்தேப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொள்கைத் தலைவனாகக் கொண்டு செயல்படும் இ... மேலும் பார்க்க