காவல் துறை என்கவுன்டரில் குற்றவாளிகள் 4 பேர் பலி!
உத்தரப் பிரதேசத்தில் காவல் துறை சிறப்பு படையினர்(எஸ்.டி.எஃப்) நடத்திய என்கவுன்டரில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 4 பேர் கொல்லப்பட்டதாக உத்தரப் பிரதேச காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஷாம்லி மாவட்டத்திலுள்ள ஜின்ஜானா பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் ‘முஷ்தஃபா காகா’ என்கிற கும்பலைச் சேர்ந்த அர்ஷத் என்பவரும் அவருடைய கூட்டாளிகள் மஞ்சீத், சதீஷ் உள்பட மொத்த நால்வர் இந்த என்கவுன்டரில் காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தேடப்பட்டு வந்த அர்ஷத்தை பற்றி துப்பு கொடுப்போருக்கு, ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை இன்று(ஜன. 21) சுட்டுப்பிடிக்க முற்பட்டபோது இரு தரப்புக்குமிடையிலான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சண்டையில், காவல் துறை ஆய்வாளர் சுனிலுக்கு குண்டடிப்பட்டுள்ளது. அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சையளிக்கப்பtடு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.