செய்திகள் :

கொல்கத்தா மாணவி வழக்கு; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க மே.வங்க அரசு மேல்முறையீடு

post image
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில், கொல்கத்தா நீதிமன்றம் குற்றவாளிக்குத் தண்டனை விதித்திருக்கிறது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.

சஞ்சய் ராய்
சஞ்சய் ராய்

இந்த விவகாரத்தில் மேற்குவங்க அரசு உண்மையை மறைப்பதாகவும், குற்றவாளியை காப்பாற்ற முயன்றதாகவும் குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் எழுந்தன. நீதி கேட்டு மேற்குவங்க மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் எல்லாம் நடத்தினர்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் சீல்டா மாவட்ட நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 18) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பு வழங்கியிருந்தார். பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் 64, 66 மற்றும் 103 (1) பிரிவின் கீழ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

சஞ்சய் ராய்
சஞ்சய் ராய்

விசாரணை தொடங்கி 57 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிந்தது. இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் கடந்த திங்கள் கிழமை வெளியாகும் என்று அறிவித்திருந்தது. அந்தவகையில் நேற்று ( ஜனவரி 20) நீதிமன்றம் சஞ்சய் ராய்க்கு 50,000 ரூபாய் அபராதமும், சாகும் வரையில் சிறை எனும் ஆயுட்காலத் தண்டனையும் வழங்கியிருந்தது. மரண தண்டனை வழங்காமல் தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்ற உயர்நீதிமன்றத்தில் மேற்கு வங்க மாநில அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

ஈமு கோழி மோசடி : ஏமாற்றியவருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.19 கோடி அபராதம் - கோவை நீதிமன்றம் அதிரடி

கொங்கு மண்டலத்தில் மக்களின் ஆசைகளை தூண்டு விட்டு பல்வேறு நூதன மோசடிகள் அரங்கேறின. அதில் ஈமு கோழி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். சுமார் 15 ஆண்டுகளாகியும் ஈமு கோழி மோசடி வழக்கு விசாரணை இப்போதும் ... மேலும் பார்க்க

`இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது; அதை ஒரே வருடத்தில் கலைக்க முடியாது'- உயர் நீதிமன்றம்

உத்தரப்பிரதேசத்தில் திருமண விவாகரத்து வழக்கு ஒன்றில், இரண்டு இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது என்றும், திருமணமான ஓர் ஆண்டுக்குள் அதைக் கலைக்க முடியாது என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் குறிப்ப... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம் இரட்டை ஆணவக் கொலை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை; கோவை நீதிமன்றம் அதிரடி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். இரண்டாவது மகன் கனகராஜ் மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலி தொழிலாளியாக பணியாற்ற... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவாகரம்: `நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயல வேண்டாம்' - உயர் நீதிமன்றக் கிளை கருத்து

"இந்த வழக்கை பொறுத்தவரை ஏனோ தானோவென்று குற்றவாளிகளை முடிவு செய்யவில்லை, அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து, ஆவணங்கள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே குற்றவாளிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது..." ... மேலும் பார்க்க

வேங்கைவயல்: ``அறிவியல் பூர்வமாக ஆய்வு... சாதிய காழ்ப்புணர்ச்சி காரணம் அல்ல'' -தமிழக அரசு விளக்கம்!

"வேங்கைவயல் வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும், 196 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் உள்ள எண்கள் ஆய்வு செய்யப்பட்டது" என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செ... மேலும் பார்க்க

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன?

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில், கொல்கத்தா நீதிமன்றம் குற்றவாளிக்கு தண்டனை விதித்திருக்கிறது.மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில், கடந்... மேலும் பார்க்க