செய்திகள் :

Saif Ali Khan: திருடனுடன் போராடிய சைஃப் அலிகான்; தப்பிக்கவிட்ட பணியாளர்கள்... விசாரணையில் பகீர்!

post image

ஒளிந்து கொண்ட ஆண் பணியாளர்கள்...

மும்பை பாந்த்ராவில் வசிக்கும் நடிகர் சைஃப் அலிகான் கடந்த வாரம் மர்ம நபரால் தாக்கப்பட்டார். நள்ளிரவில் வீட்டிற்குள் வந்த மர்ம நபர் சைஃப் அலிகானை பிளேடால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டான். அவனை போலீஸார் 70 மணி நேரம் கழித்து மும்பை அருகில் உள்ள தானே என்ற இடத்தில் கைது செய்தனர். சைஃப் அலிகான் வீட்டிற்குள் புகுந்த திருடன் ஷெரிபுல் பஹிர் முதலில் அங்கு பணிசெய்யும் பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். அச்சத்தத்தை கேட்டு சைஃப் அலிகான் எழுந்து வந்து திருடனுடன் சண்டையிட்டார். இதில் சைஃப் அலிகான் மீது திருடன் பிளேடால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டான். சைஃப் அலிகான் வீட்டில் 4 ஆண் பணியாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் இத்தாக்குதலின் போது என்ன செய்தார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போலீஸார் நடத்திய விசாரணையில் பெண்பணியாளர்கள் சத்தம் போட்டவுடன் வீட்டில் வேலை செய்யும் ஆண் பணியாளர்கள் பயத்தில் அங்கு ஒளிந்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

`பங்களாதேஷில் இருந்து நீந்தி வந்தான்..'

ஆண் பணியாளர்கள் திருடனுடன் சண்டையிட்டு இருந்தால் சைஃப் அலிகான் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கமாட்டார். அதோடு திருடனையும் தப்ப விடாமல் பிடித்திருக்க முடியும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

பங்களாதேஷை சேர்ந்த அத்திருடன் ஷெரிபுல் பஹிர் கடந்த 5 மாதங்களாக விஜய் தாஸ் என்று பெயர் மாற்றிக்கொண்டு மும்பையில் வசித்து வந்துள்ளான். அவன் இதற்கு முன்பு வேலை செய்த ஒரு உணவகத்தில் ஆயிரம் ரூபாயை திடிய குற்றத்திற்காக வேலையில் இருந்து நீக்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பஹிர் எவ்வாறு இந்தியாவிற்குள் வந்தான் என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்திருக்கிறது.

இதன்படி பஹிர் பங்களாதேஷில் இருந்து இந்தியா மற்றும் பங்களா தேஷ் இடையே ஓடும் ஆற்றில் 200 மீட்டர் அளவுக்கு நீச்சலடித்து இந்திய எல்லைக்குள் வந்துள்ளான். இந்தியாவின் மேகாலயாவிற்குள் வந்ததாக தெரிவித்துள்ளான். தற்போது இந்தியா பங்களாதேஷ் இடையே பதட்டம் நிலவுவதால் வழக்கமாக வரக்கூடிய மேற்கு வங்க பாதையில் அதிக பாதுகாப்பு இருக்கும் என்று கருதி மேகாலயா பாதையை தேர்வு செய்ததாகவும் பஹிர் தெரிவித்துள்ளான். தந்தை இறந்த பிறகு பணம் சம்பாதித்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு தனது வீட்டைவிட்டு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வெளியேறி பஹிர் இந்தியா வந்துள்ளான். இந்தியாவில் வேலைக்காக சில ஏஜெண்ட்களிடம் பணமும் கொடுத்துள்ளான் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிளேடால் தாக்ககாரணம்...

மேலும் பங்களாதேஷிலும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள பஹிர் மும்பையில் சைஃப் அலிகானை தாக்கிய பிறகு கார்ரோடு ரயில் நிலையத்தில் சிறிது நேரம் உறங்கிவிட்டு அங்கிருந்து தாதர் வழியாக ஒர்லியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றபோதுதான் தனது போட்டோக்கள் டிவியில் வருவதை கண்டுள்ளான். உடனே தானேயில் இருந்து கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் மூலம் ஹவுரா செல்லும் நோக்கத்தில் தானேயில் பதுங்கி இருந்துள்ளான். ஆனால், அதற்குள் அவனை போலீஸார் கைது செய்துவிட்டனர். அவனிடம் விசாரித்தபோது சைஃப் அலிகான் தன்னை தப்பித்து போக விடாமல் தடுத்த காரணத்தால்தான் அவரது முதுகில் தொடர்ந்து பிளேடால் தாக்கியதாக தெரிவித்துள்ளான். மேலும் பாதுகாப்பு மிகுந்த சைஃப் அலிகான் கட்டிடத்தில் வாட்ச்மேனாக வேலை செய்யபவர்கள் துப்புரவு தொழிலாளர்கள் என்றும், கட்டிடத்திற்குள் வருபவர்கள் குறித்த விபரங்கள் கூட சரியாக பதிவேடுகளில் பராமரிக்கப்படுவதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

பாராட்டு பெற்ற போலீஸார்

ஆட்டோ டிரைவரின் சேவை..

மேலும் சைஃப் அலிகானை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆட்டோ டிரைவர் அதற்காக கட்டணம் எதுவும் வாங்கவில்லை. இதையடுத்து ஆட்டோ டிரைவரின் சேவையை பாராட்டி அவருக்கு 11 ஆயிரம் சன்மானம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று கொடுத்துள்ளது. பஹிரை கண்டுபிடிக்க இரண்டு நாள்கள் இரவு பகலாக வேலை செய்த 75 போலீஸாருக்கு இணை கமிஷனர் சத்யநாராயணன் பாராட்டு தெரிவித்தார்.

``கல்வித்துறையில் அரசு வேலை..'' 34 பேரிடம் ரூ 1.11 கோடி வசூல் -2 பெண்கள் கைது!

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் பொறியாளர் சுந்தரவிக்னேஷ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கல்வித்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக தான் உள்பட 33 பேரிடம் 1.11 கோடி ரூ... மேலும் பார்க்க

Baba Ramdev: மீண்டும் சிக்கலில் பாபா ராம்தேவ்; கைது வாரண்ட் பிறப்பித்த கேரள நீதிமன்றம்!

பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவின் மருந்துப் பொருள்களின் விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதாகவும், அதைத் தடை செய்யக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் கூட இந்த நிறுவனத... மேலும் பார்க்க

சேலத்தில் மீண்டும் தலைதூக்கும் போதை ஊசி கலாச்சாரம்... கண்டுக்கொள்ளுமா காவல்துறை!

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமான சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகியவற்றில் தான் போதை வஸ்துக்களை உட்கொண்டதால் ஏற்பட்ட குற்றச் சம்பவங்கள் அதிகமாகியுள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்!சேலம் மாநகரத்தி... மேலும் பார்க்க

பரமக்குடி: நீதிபதியை நோக்கி வீசப்பட்ட காலணி... மானாமதுரை எம்.எல்.ஏ சகோதரர் கைது!

மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தமிழரசியின் சகோதரர் ரமேஷ் பாபு. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக ரமேஷ்பாபுவின் மனைவி ராஜேஸ... மேலும் பார்க்க

கோவை: ஓடைக்குள் இடிந்து விழுந்த வீடு - கண் இமைக்கும் நேரத்தில் திக்... திக்..!

கோவைரத்தினபுரி பகுதியில் சங்கனூர் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் கரையில் சுரேஷ் என்பவர் கான்கிரீட் வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த சில நாள்களாக சங்கனூர் ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. நேற்ற... மேலும் பார்க்க

கூட்டுப் பாலியல் கொடுமை செய்யப்பட்ட 11-ம் வகுப்பு படிக்கும் சிறுமி; போக்சோவில் கைதான இளைஞர்கள்!

பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தன் தோழியை பார்க்கச் சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (20) சிறுமியிடம் நைஸ... மேலும் பார்க்க