கேபிடல் கலவரத்தில் கைதான 1,500 பேருக்கு டிரம்ப் பொதுமன்னிப்பு!
ஏர் ஹார்ன்: ஓட்டுநர்களுக்கு நூதன தண்டனை அளித்த போலீஸ்!
அதிக ஒலியுடன் மக்களுக்கு இடையூறு தரும் வகையில் ’ஏர் ஹார்ன்’ அடித்த வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து காவலர் நூதன தண்டனை அளித்துள்ளார்.
கர்நாடக மாவட்டம், ஷிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் திருமலேஷ் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அந்த வழியாக ஏர் ஹார்ன்’ வைத்து அதிக ஒலியுடன் ஹார்ன் அடித்த பேருந்துகள், லாரிகளை சாலையோரம் நிறுத்தியுள்ளார், அதன் ஓட்டுநர்களை வாகனத்தின் முன்பு உட்கார வைத்து ஹாரன் அடித்து, ஒலியை கேட்க வைத்து அறிவுரை வழங்கினார்.
இந்த விடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், பலரும் காவலரின் நூதன தண்டனையை வரவேற்றுள்ளனர்.
இந்த நடவடிக்கை குறித்து ஆங்கில ஊடகத்துக்கு திருமலேஷ் அளித்த பேட்டியில்,
அதீத சப்தம் குறித்து பல மூத்த குடிமக்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர், சப்தமாக ஹார்ன் அடிக்கும்போது சுற்றியுள்ளவர்கள் பயந்து போகிறார்கள்.
அதனால், எந்தளவு மோசமான சப்தத்தை எழுப்புகிறார்கள் என்பதை அவர்களுக்கு புரிய வைக்கவே அவர்கள் வாகனத்தின் ஹார்ன் சப்தத்தையே கேட்க வைத்தேன்.
அதிக டெசிபல் ஒலி எழுப்பும் ஹார்ன் வைத்துள்ளவர்களுக்கு அபராதம் விதிக்க பேருந்து நிலையத்தில் ஆய்வு நடத்தினோம். ஆனால், தொடர்ந்து இதுபோன்ற ஹார்ன்களை பயன்படுத்திக் கொண்டே இருந்தார்கள்.
மக்களின் நிலையை ஓட்டுநர்கள் புரிந்து கொள்வதில்லை, நேரடியாக அனுபவிக்கும்போதுதான் அதன் தீவிரத்தன்மையை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று இதனைச் செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.