செய்திகள் :

`திருமணத்துக்குத் தயாராகுங்கள்'- வரப்போகும் முக்கியமான முகூர்த்த நாள்கள் இவைதான்

post image
குரோதி வருடத்தின் தை மாதத்தில் இருக்கிறோம் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. தை பிறந்ததும் சுபமுகூர்த்த நாள்களும் வரிசைகட்ட ஆரம்பிக்கும்.

அப்படி இந்தக் குரோதி வருடத்தின் அடுத்த மூன்று மாதங்களில் வரும் சுபமுகூர்த்த நாள்களை அறிந்துகொள்வோம். இந்த நாள்களில் சுபமுகூர்த்த வேளை எது என்பதையும் அறிந்துகொள்வோம். இந்த வேளையில் (பங்குனி மாதம் தவிர) பிற மாதங்களில் அனைத்து சுபநிகழ்ச்சிகளையும் மேற்கொள்ளலாம். சுபமுகூர்த்தத்தை கணிக்கும்போது சம்பந்தப்பட்ட மணமகன் அல்லது மணமகளுக்கு சந்திராஷ்டமம் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

முருகப்பெருமான்

தை மாத சுபமுகூர்த்த நாள்கள் மற்றும் நேரம்

26.1.25 ஞாயிற்றுக்கிழமை - காலை 7.30 மணி முதல்ல் 9 மணி வரை - கும்ப லக்னம்

27.1.25 திங்கட்கிழமை - காலை 6.00 மணி முதல் 7.30 மணிவரை - கும்பலக்னம்

31.1.25 வெள்ளிக்கிழமை - காலை 6.00 மணி முதல் 7.30 மணிவரை - கும்ப லக்னம்

2.2.25 ஞாயிற்றுக்கிழமை - காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை - கும்ப லக்னம்

3.2.25 திங்கட்கிழமை - காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை - கும்ப லக்னம்

10.2.25 - திங்கட்கிழமை காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை - கும்பலக்னம்

மாசி மாத சுபமுகூர்த்த நாள்கள்

மாசி மாதத்தில் அதிகபட்சமாக 9 சுபமுகூர்த்த நாள்கள் வருகின்றன. அந்த நாள்கள் ம்ற்றும் நேரம் குறித்துக் காண்போம்.

16.2.25 - ஞாயிற்றுக்கிழமை - காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை கும்ப லக்னம்

17.2.25 - திங்கள்கிழமை - காலை 6.00 வ் முதல் 7.30 மணி வரை கும்ப லக்னம்

19.2.25 - புதன் கிழமை - காலை 6.00 வ் முதல் 7.30 மணி வரை கும்ப லக்னம்

23.2.24 - ஞாயிற்றுக்கிழமை - காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை மீன லக்னம்

விவாஹ சுபமுகூர்த்தம்!

2.3.25 - ஞாயிற்றுக்கிழமை - காலை 6.00 முதல் 7.00 மணி வரை மீன லக்னம்

3.3.25 - திங்கட்கிழமை - காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை மீன லக்னம்

9.3.25 - ஞாயிற்றுக்கிழமை - காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை மேஷ லக்னம்

10.3.25 - திங்கட்கிழமை - காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை மேஷ லக்னம்

12.3.25 - புதன் கிழமை - காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை கும்ப லக்னம்

பொதுவாக பங்குனி மாதத்தில் சிலர் திருமணம் செய்ய மாட்டார்கள். அதாவது சூரியன் கேந்திர ஸ்தானங்களான மிதுனம் (ஆனி), கன்னி (புரட்டாசி), தனுசு (மார்கழி), மீனம் (பங்குனி) மாதங்களில் திருமணங்களைத் தவிர்ப்பார்கள். ஆனால் ஒரு சில சமூகங்களில் பங்குனி மாதத்தில் திருமணம் செய்யும் வழக்கம் உண்டு. பங்குனி மாதத்தில் தெய்வத் திருமணங்கள் அனைத்து ஆலயங்களிலும் நடைபெறும் என்பதால் அந்தக் காலத்தில் திருமணம் செய்யலாம் என்பாரும் உண்டு. அந்த வகையில் பங்குனி மாத சுபமுகூர்த்த நாள்களையும் நேரத்தையும் காண்போம்.

16.3.25 - ஞாயிற்றுக்கிழமை - காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை மேஷ லக்னம்

17.3.25 - திங்கட்கிழமை - காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை ரிஷப லக்னம்

31.3.25 - திங்கட்கிழமை - காலை 6.30 மணி முதல் 7.00 மணி வரை மேஷ லக்னம்

திருமணம்

4.4.25 - வெள்ளிக்கிழமை - காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை ரிஷப லக்னம்

7.4.25 - திங்கட்கிழமை - காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மேஷ லக்னம்

9.4.25 - புதன்கிழமை - காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை மேஷ லக்னம்

11.4.25 - வெள்ளிக்கிழமை - காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை மேஷ லக்னம்

'தென்கொரிய நாட்டு மாப்பிள்ளை... கரூர் பெண்’ - கரூரில் களை கட்டிய பொங்கல் விழா

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே நடையனூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (28). பொறியியல் பட்டம் பெற்ற இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் போது, தென்கொரிய நாட்டைச... மேலும் பார்க்க

வெண்ணிற உடையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ; 9 பேருக்கு மட்டுமே குண்டம் இறங்க அனுமதி- ஏன் தெரியுமா?

ஹெத்தையம்மனுக்கு விழாநீலகிரி மாவட்டத்தில் பரவலாக வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்கள் ஹெத்தையம்மன் எனும் மூதாதையரை குல தெய்வமாக வணங்கி வருகின்றனர். ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஹெத்தைய... மேலும் பார்க்க

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மின்னலாய் பாய்ந்த காளைகள், அடக்கி வென்ற வீரர்கள் | Photo Album

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூ... மேலும் பார்க்க

ஊட்டி: ராஜ வேடம், பாரம்பர்ய இசையில் நடனம்; களைகட்டிய கோத்தர் பழங்குடிகளின் திருவிழா!

நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பண்டைய பழங்குடி இனத்தைச் சேர்ந்த கோத்தர் இன‌ மக்கள் மட்பாண்ட கலையில் கைதேர்ந்த கலைஞர்களாகத் திகழ்ந்து வருகின்றனர். இரும்பு பட்டறை நுட்பங்களையும் பல ஆண்டுகளாகப் பயன்... மேலும் பார்க்க

பொங்கல் விழா : ஆரோவில்லில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு - களைகட்டிய கொண்டாட்டம்

பொங்கல் விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு பொங்கல் விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு பொங்கல் விழாவை முன்னிட்டு விழுப்புரம் ... மேலும் பார்க்க