சத்ரபதி சம்பாஜி மனைவியாக ரஷ்மிகா: போஸ்டர் வெளியீடு!
சத்ரபதி சம்பாஜி வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ’சவ்வா’ படத்தில் சம்பாஜியின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஷ்மிகா மந்தனாவின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
மராத்தியப் பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பாலிவுட்டில் உருவாகியுள்ளது.
லூக்கா சுப்பி, மீமி போன்ற படங்களின் இயக்குநர் லக்ஷ்மண் உத்தேகர் இயக்கும் இந்தப் படத்தில் சத்ரபதி சம்பாஜியாக ஹிந்தி நடிகர் விக்கி கௌஷல் நடித்திருக்கிறார். சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
ரஷ்மிகா மந்தனா கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் வருகிற பிப். 14 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சவ்வா பட டிரைலர் நாளை (ஜன. 22) வெளியாகவுள்ளது.