தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெறும் கூலி படப்பிடிப்பு!
தாய்லாந்தில் கூலி படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தாய்லாந்தின் பாங்காக்கில் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: ரூ. 150 கோடியைக்கூட வசூலிக்காத கேம் சேஞ்சர்!
அங்கு, முக்கியமான சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்ட வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஜன. 28 வரை தாய்லாந்தில் படப்பிடிப்பு எடுக்கத் திட்டமிட்டுள்ளதால் ஆக்ஷன் காட்சிகளை அதிக சண்டைக் கலைஞர்களை வைத்து எடுத்து வருகின்றனராம்.