காணும் பொங்கல் விடுமுறையை ரத்து செய்ய பரிந்துரைப்போம்: பசுமை தீர்ப்பாயம்
Ambani: அமெரிக்க அதிபராக ட்ரம்ப்; தொடக்க விழாவில் அம்பானி குடும்பம்! - வைரலாகும் புகைப்படம்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க நேரப்படி (20-ம் தேதி) 47-வது அதிபராக இன்று பதவியேற்கிறார். அமெரிக்கா அதிபராக இரண்டாவது முறை ட்ரம்ப் பதவியேற்கும் இந்த நிகழ்வு உலக அரங்கில் கவனம் பெற்றிருக்கிறது. பதவியேற்பு விழா எந்தளவுக்கு கவனிக்கப்படுமோ, அதேபோல அதிபர் பதவிக்காக நடத்தப்படும் தொடக்க விழாவும் அங்கு மிகவும் பிரபலம். இந்த விழாவுக்கு உயர்மட்ட அழைப்பாளர்களுக்கு விருந்து ஏற்பாடு நடந்தது. அதில், உலகளாவிய வணிகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், முக்கியப் பிரமுகர்கள் கலந்துக்கொண்டு புதிய நிர்வாகத்தைக் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியும், ரிலையன்ஸ் அறக்கட்டளைத் தலைவர் நீதா அம்பானியும் கலந்துக்கொண்டிருக்கின்றனர். அம்பானியும், நீதா அம்பானியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் எடுத்துக்கொண்டப் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்திருக்கும் அம்பானியின் உலகளாவிய செல்வாக்கும், அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துக்கும், இந்தியாவுக்கும் இருக்கும் உறவுகள் குறித்த விவாதங்களும் தற்போது மீண்டும் கவனம் பெற்றிருப்பது குறிப்பிடதக்கது.