Bigg Boss 8 title winner Muthukumaran இதுக்கு deserved, நெகிழ்ந்த Soundariya | V...
காணும் பொங்கல் விடுமுறையை ரத்து செய்ய பரிந்துரைப்போம்: பசுமை தீர்ப்பாயம்
காணும் பொங்கல் அன்று அரசு விடுமுறை அளிப்பதை ரத்து செய்ய பரிந்துரைப்போம் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மக்கள் காணும் பொங்கலன்று (ஜன. 16) மெரீனா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர்.
இந்த கொண்டாட்டத்தின்போது, பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகளை கடற்கரைகளிலேயே மக்கள் போட்டுச் சென்றதால் கடும் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டது. பல நூறு டன் குப்பைகளை அகற்றப்பட்டது.
இதையும் படிக்க : முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்
இந்த நிலையில், மெரீனா கடற்கரை குப்பைக் கூளமாக மாறுவதற்கு மக்கள்தான் காரணம் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
மேலும், காணும் பொங்கலன்று விடுமுறை அளிப்பதை ரத்து செய்யக் கோரி தமிழக அரசுக்கு பரிந்துரைப்போம் என்று பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.