யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெறக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க....
ஒரு சொட்டு தண்ணீர் குடிக்காமல் 11 நாள்; கிரீஷ்மாவுக்கு தூக்கு: நீதிமன்ற தீர்ப்பில் சொல்லியிருப்பது என்ன?
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷரோன் ராஜ் கொலை வழக்கில், குற்றவாளி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்திருக்கும் நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம், அதற்கான காரணங்களையும் விளக்கியிருக்கிறது.
ஆயுர்வேத கசாயம் என்று கூறி, 23 வயது இளைஞர் ஷரோன் ராஜை கொலை செய்த வழக்கில், அவரது காதலி கிரீஷ்மா மற்றும் உறவினர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்திருந்த நீதிமன்றம், கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனையும், உறவினருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்துள்ளது.
இன்று காலை நீதிமன்றம் கூடியதும், தண்டனையை பிறப்பித்த நீதிமன்றம், "பாலியல் ரீதியாக நெருக்கம் காட்டுவது போல நடித்து ஷரோனை வீட்டுக்கு அழைத்து, பின்னர் குற்றம் செய்திருப்பதை ஒருபோதும் புறந்தள்ள முடியாது. குற்றச் செயல்களுக்கு தண்டனையை உறுதி செய்வது அரசின் பொறுப்பு.
கசாயம் கொடுக்கும் போது, அதனை ஷரோன் செல்போனில் பதிவு செய்த போது, அதனை பதிவு செய்ய வேண்டாம் என்று கிரீஷ்மா கேட்டுக் கொள்வதும் பதிவாகியிருக்கிறது. இந்த விடியோவை ஷரோன் பதிவு செய்தபோதே, ஏதோ தவறாக நடக்கிறது என்று அவர் சந்தேகம் கொண்டிருக்க வேண்டும் என்பது விடியோ சாட்சியம் மூலம் தெரிய வந்துள்ளது. கிரீஷ்மா கொடுத்த விஷத்தால், ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் 11 நாள்கள் உயிருக்குப் போராடினார் ஷரோன் ராஜ்" என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.