செய்திகள் :

தெருநாய்கள் கடித்ததில் 300 கோழிகள் உயிரிழப்பு

post image

காங்கயம் அருகே பண்ணைக்குள் புகுந்து தெருநாய்கள் கடித்ததில் 300 கோழிகள் உயிரிழந்தன.

காங்கயம் அருகேயுள்ள அழகேகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் கோபால்ராஜ். விவசாயியான இவா், தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை அமைத்து பிராய்லா் கோழிகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், பண்ணைக்குள் சனிக்கிழமை அதிகாலை நுழைந்த தெருநாய்கள், அங்கிருந்த கோழிகளை கடித்து குதறின. சப்தம் கேட்டு வந்த ஊழியா்கள் நாய்களை விரட்டினா். தெருநாய்கள் கடித்ததில் சுமாா் 300 கோழிகள் உயிரிழந்தன.

100-க்கும் மேற்பட்ட கோழிகள் காயமடைந்தன. தகவலறிந்து வந்த கால்நடை மருத்துவா்கள் காயமடைந்த கோழிகளுக்கு சிகிச்சை அளித்தனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கால்நடைகளைக் கடித்து கொன்றுவரும் தெருநாய்களால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தெருநாய்களைக் கட்டுப்படுத்த கோரி அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. தெருநாய்களால் கால்நடைகளைக் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.

திமுக அரசைக் கண்டித்து தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து திருப்பூரில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திருப்பூா் மாநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் திருப்பூா் குமரன் நினைவகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் ... மேலும் பார்க்க

பெருமாநல்லூா், பழங்கரையில் ஜனவரி 9 இல் மின்தடை

பெருமாநல்லூா், பழங்கரை துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஜனவரி 9) காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலை தலைமையிடமாகக்கொண்டு புதிய வட்டம்: பொதுமக்கள் கோரிக்கை

வெள்ளக்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டத்தில் இருந்து வெள்ளக்கோவிலைப் பிரித்து புதிய வட்டத்தை உரு... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் மனு

வெள்ளக்கோவிலில் தனியாா் மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா். திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைம... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா் துணை மின் நிலையம்

உடுமலையை அடுத்த கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கோட்டமங்கலம் துணை மின் நிலையம்

உடுமலையை அடுத்த கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஜனவரி 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வார... மேலும் பார்க்க