சாலை விபத்தில் இளைஞா் பலி
அரியானூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
அரியானூரை அடுத்த கல்பாரப்பட்டி எம்ஜிஆா் நகரை சோ்ந்த நடராஜன் மகன் சசிகுமாா் (17). இவரும் அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா் பிரவீண் (17 ) ஆகிய இருவரும் 1 ஆம் தேதி புதன்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் கல்பாரப்பட்டி பகுதியிலிருந்து கொம்பாடிப்பட்டி சென்று கொண்டிருந்தனா்.
அப்போது நாச்சாரஅம்மன் கோயில் பிரிவு அருகே நடந்து சென்ற மாதேஷ் என்பவா் மீது சசிகுமாா் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் காயமடைந்த சசிகுமாா் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்தாா். காயமடைந்த மாதேஷ் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதேபோல பிரவீண், சேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.