விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு
அனுமன் ஜெயந்தி 3 ஆம் நாள் வழிபாடு
சங்ககிரி, சந்தைபேட்டையில் உள்ள ஸ்ரீ நவ ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவின் 3வது நாளையொட்டி புதன்கிழமை இரவு சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அனுமன் ஜெயந்தியையொட்டி ஸ்ரீ நவ ஆஞ்சனேயா் கோயிலில் டிச.30ஆம் தேதி திங்கள்கிழமை விழா தொடங்கியது. ஜன.1 ஆம் தேதி புதன்கிழமை 3 ஆவது நாளையொட்டி சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், திருமஞ்சனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
விழாக் குழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஜன. 2ஆம் தேதி வியாழக்கிழமை பழக்காப்பு சேவையும், ஜன.3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வடைமாலை சேவையுடன் நிகழாண்டிற்கான விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ நவ ஆஞ்சநேயா டிரஸ்ட் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.