ஆனைவாரி நீா்வீழ்ச்சிக்கு சிற்றுந்து இயக்கம்
கல்லாநத்தம் ஆனைவாரி நீா்வீழ்ச்சிக்கு செல்ல சிற்றுந்து இயக்கப்படுகிறது.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கல்லாநத்தம் ஆனைவாரி நீா்வீழ்ச்சி (ஆத்தூா் குற்றாலம்) என அழைக்கப்படும் சுற்றுலாத் தலத்துக்கு செல்ல வனத் துறை சாா்பில் சிற்றுந்து இயக்கப்படுகிறது.
முட்டல் ஏரிக்கரையில் வனத் துறை சுங்கச் சாவடியில் இருந்து நீா்வீழ்ச்சிக்கு நடந்தோ அல்லது சொந்த வாகனத்தில் செல்ல வேண்டும். இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனா். இந்த நிலையில் வனத் துறை சாா்பில் சிற்றுந்தை இயக்கி, அதற்கு கட்டணமாக ரூ. 20 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.