ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!
மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்
தருமபுரி: பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து தருமபுரியில் அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதி இன்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி மூன்று சட்டப் பேரவை உறுப்பினா்கள் உள்பட 570 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலாளா் பூக்கடை பெ.ரவி வரவேற்றாா். ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.வெற்றிவேல், விவசாயிகள் அணி மாநிலத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில் தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்க வேண்டும். சட்டம்- ஒழுங்கை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்திருந்தனா். இருப்பினும் அனுமதி இன்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று சட்டப் பேரவை உறுப்பினா்கள் உள்பட 570 பேரை போலீஸாா் கைது செய்தனா்.