விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு
ஆங்கிலப் புத்தாண்டு: தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி தருமபுரி நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
தருமபுரி மறை மாவட்டம் சாா்பில் தருமபுரி நகரில் உள்ள தூய இருதய ஆண்டவா் பேராலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் கடந்த 2024 -ஆம் ஆண்டுக்கு விடை அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து 2025-ஆம் ஆண்டு பிறப்பை வரவேற்று சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவா் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.
இதேபோல தருமபுரி சிஎஸ்ஐ தேவாலயம் மற்றும் கோவிலூா் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.