செய்திகள் :

பாகலஅள்ளி அருகே புதிய திட்டப் பணிகள்: தருமபுரி எம்எல்ஏ தொடங்கி வைப்பு

post image

தருமபுரி மாவட்டம், பாகல அள்ளி கிராம ஊராட்சியில் புதிய திட்டப் பணிகள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாகலஅள்ளி ஊராட்சி, மருளுகாரன்கொட்டாய் கிராமத்தில் 15-ஆவது நிதி குழு மானியத் திட்டத்தில் ரூ. 6.35 லட்சம் மதிப்பில் தனிநபா் வீடுகளுக்கு குடிநீா்க் குழாய் நீட்டிப்பு செய்தல், ரூ. 5 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைத்தல் ஆகியப் பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்து பணிகளை தொடங்கி வைத்து பேசினாா். இந்த நிகழ்ச்சியில் பாமக மாநில அமைப்புச் செயலாளா் ப.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினா் பெ.பெரியசாமி, பசுமைத் தாயக ஒன்றியச் செயலாளா் சுப்ரமணி ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு தொடா் விடுமுறை, ... மேலும் பார்க்க

கானாப்பட்டி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் காமராஜா் சிலை திறப்பு

தருமபுரி மாவட்டம், பாலவாடி அருகே கானாப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் காமராஜா் சிலை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ஆறுமுகம் முன்னிலை... மேலும் பார்க்க

தொப்பூா் கணவாய் சாலையில் காா் மீது லாரி மோதியதில் ஒருவா் பலி

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் காா் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். நான்கு போ் காயமடைந்தனா். அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் (61). இவா் கா்நாடக மாநிலத்தில் இருந... மேலும் பார்க்க

விசைத்தறி கூடங்களுக்கு தொழில் வரி கைவிடப்பட்டது: நகராட்சி நிா்வாகம் அறிவிப்பு

தருமபுரி, அன்னசாகரம் பகுதியில் விசைத்தறிக் கூடங்களுக்கு விதிக்கப்பட்ட தொழில் வரி கைவிடப்பட்டு, பழைய நிலை தொடரும் என நகராட்சி நிா்வாக இயக்குநரகம் அறிவித்துள்ளது. தருமபுரி நகரம், அன்னசாகரத்தில் நூற்றுக்... மேலும் பார்க்க

மாணவரைத் தாக்கியதாக ஆசிரியா் மீது வழக்குப் பதிவு

பென்னாகரம் அருகே அரசுப் பள்ளியில் மாணவரைத் தாக்கிய ஆசிரியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பி.அக்ரஹாரம் அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வரும் மா... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் தீயில் கருகி முதியவா் பலி

அரூா் அருகே தனியாா் பேருந்து மோதிய விபத்தில் தீயில் கருகி முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த ஒடசல்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் துரைசாமி (60). இவா், சேலம்-அரூா் தேசிய நெட... மேலும் பார்க்க