விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு
அதியமான்கோட்டையில் வீரகாரன் கோயில் திருவிழா
தருமபுரி அருகே அதியமான்கோட்டையில் வீரகாரன், நாகாத்தம்மன், காளியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
கோயில் திருவிழா கொடியை முன்னாள் அமைச்சா் கே.பிஅன்பழகன் எம்எல்ஏ ஏற்றி வைத்தாா். இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து வீரகாரன், நாகத்தம்மன், காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தனா். இதில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), எஸ்.பி. வெங்கடேஸ்வரன் (தருமபுரி) மற்றும் விழா குழுவினா், பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.