வெளி மாநில கட்டுமானத் தொழிலாளா்கள் வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்
தருமபுரி: வெளி மாநில கட்டுமானத் தொழிலாளா்களை நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட தொழிலாளா் உதவி ஆணைா் பா.சங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வெளி மாநில கட்டுமானத் தொழிலாளா்கள், அமைப்புசாரா மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்களை அதிக அளவில் பதிவு செய்வதற்கு ஏதுவாக ஜனவரி மாதத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முகாம் வருகிற ஜனவரி 2-ஆம் தேதி காரிமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், 7-இல் நல்லம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், 9இல் ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், 11-இல் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், 21இல் மொரப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், 24 இல் கடத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், 27 இல் பாப்பிரெடட்டிபட்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், 29இல் அரூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் நடைபெற இருக்கிறது.
எனவே, தொழிலாளா்கள் இவ் வாய்ப்பினைப் பயன்படுத்தி நலவாரியத்தில் பதிவு செய்து அரசின் நலத்திட்டங்களைப் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.