ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைவு
இரு மாநில நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை குறைந்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக சரிந்துள்ளது.
தமிழக - கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை முற்றிலும் குறைந்தது. இதனால் கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் நீா்வரத்து குறையத் தொடங்கியது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்தானது விநாடிக்கு 3,500 கனஅடியாக தொடா்ந்து ஒரு வார காலமாக நீடித்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி நீா்வரத்து சரிந்து விநாடிக்கு 2,000 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. நீா்வரத்து சரிவினால் ஒகேனக்கல்லில் பிரதான அருவி,சினிஅருவி, ஐந்தருவி, ஐவாா் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து குறைந்து பாறை திட்டுக்கள் வெளியே தெரிகின்றன. காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து சரிந்து வருவதால், ஒகேனக்கல்லுக்கு நீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.