ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!
ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
தெற்கு காஸாவின் கான் யூனிஸில் உள்ள பகுதியில் உளவுத்துறை அடிப்படையில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் ஹசம் ஷாவான் வியாழக்கிழமை கொல்லப்பட்டார்.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அந்தப் பதிவில், “தெற்கு காஸாவில் உள்ள ஹமாஸ் உள்நாட்டுப் பாதுகாப்புப் படையின் தலைவர், தீவிரவாதியான ஹசம் ஷாவான், கான் யூனிஸில் உள்ள மக்கள் வாழும் பகுதியில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்திய தாக்குதலில் வியாழக்கிழமை கொல்லப்பட்டார்.
காஸாவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைத் தாக்குதல்களில் ஹமாஸின் ராணுவப் பிரிவுடன் ஷாவான் இணைந்து செயல்பட்டு வந்தார்” எனக் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், இந்த வார தொடக்கத்தில், ஹமாஸ் படைப்பிரிவின் தளபதி அப்துல்-ஹாதி சபா கொல்லப்பட்டார். 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு சபா தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.