மியான்மா்: 6,000 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு
மியான்மா் சுதந்திர தினத்தையொட்டி 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு அந்த நாட்டு ராணுவ அரசு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளது.
எனினும், ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டவா்களில் சிலா்தான் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனா்.