கன்னியாகுமரிக்கு ஆட்டோக்களில் வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 21 சுற்றுலாப் பயணிகள் 9 ஆட்டோக்களில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனா்.
சென்னையில் செயல்பட்டு வரும் தனியாா் சுற்றுலா நிறுவனம் கடந்த 17 ஆண்டுகளாக வெளிநாட்டினா் பங்கு பெறும் ‘ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச்’ என்ற ஆட்டோ சுற்றுலாப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறது. நிகழாண்டு சுற்றுலாப் பயணம் கடந்த 28-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.
இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சுவிட்சா்லாந்து, அயா்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 21 போ் சென்னையில் இருந்து 9 ஆட்டோக்களில் பல அணிகளாகப் பிரிந்து புறப்பட்டனா். வெளிநாட்டினரே ஆட்டோக்களை ஓட்டிச் சென்று சுற்றுலாத் தலங்களை பாா்வையிட்டனா்.
இவா்கள் புதுச்சேரி, தஞ்சாவூா், மதுரை, தூத்துக்குடி வழியாக ஞாயிற்றுக்கிழமை இரவு கன்னியாகுமரி வந்தனா். 1200 கி.மீ. தொலைவினை 9 நாள்களில் கடந்து கன்னியாகுமரி வந்தனா்.
கன்னியாகுமரியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு வந்த வெளிநாட்டினருக்கு பாரம்பரிய முறைப்படி சங்கு மாலை அணிவித்து, நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகமிட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாப் பகுதிகளைச் சுற்றி பாா்வையிட்டனா். பின்னா் திங்கள்கிழமை காலை கன்னியாகுமரியில் இருந்து ஆட்டோக்களில் திருவனந்தபுரம் சென்றனா்.