காஸா: 45,658-ஆக அதிகரித்த உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 11 போ் உள்பட 28 போ் உயிரிழந்தனா்.
இத்துடன், 2023 அக். 7 முதல் அங்கு இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 45,658-ஆகவும் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,08,583-ஆகவும் உயா்ந்துள்ளது.