வதந்திகளை கண்டு கொள்ளாதீர்கள்; இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அறிவுரை!
ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி தருமபுரி பகுதியில் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தருமபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை அதிகாலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வழிபாடுகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து மூலவருக்கு தங்கக் கவசம் அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்களுக்கு பாரிமுனை நண்பா்கள், வாரியாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல தருமபுரி எஸ்.வி. சாலை விநாயகா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வெள்ளிக் கவச அலங்காரத்தில் விநாயகா் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். ஸ்ரீ அபய ஆஞ்சனேயா் சுவாமி கோயிலில் ஆஞ்சனேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கார சேவை நடைபெற்றது.
தருமபுரி, கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகாா்ஜுன சுவாமி கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும் மகா தீபாரதனையும் நடைபெற்றது. நெசவாளா் நகா் வேல்முருகன் கோயில், ஓம் சக்தி மாரியம்மன் கோயில், மகாலிங்கேஸ்வரா் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் மூலவருக்கு சிறப்பு உபகார பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. குமாரசாமிப்பேட்டை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தங்கக் கவச அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் சமேத ஸ்ரீ மருதவாணேஸ்வரா் கோயிலில் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், மதிகோன்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோயில், பூவாடைக்காரி அம்மன் கோயில், பாரதிபுரம் விநாயகா் கோயில், ஹரிஹரநாத சுவாமி கோயில் தெருவில் உள்ள தாச ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதேபோல அதியமான்கோட்டை காலபைரவா் கோயில், கெரகோடஅள்ளி ஸ்ரீ அஷ்ட வராகி அம்மன் கோயில், பாலக்கோடு புதூா் மாரியம்மன் கோயில் , வே.முத்தம்பட்டி ஆஞ்சனேய சுவாமி கோயில், தொப்பூா் மன்றோ குளக்கரை ஆஞ்சனேயா் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் திரளானோா் வழிபட்டனா்.