Vanangaan: ``சூர்யா சார்கிட்ட சொல்லிட்டுதான் அருண் விஜய் நடிக்க வந்தார்'' - சுரே...
Nallakannu: ``பெரியார், கலைஞருக்கு கிடைக்காத வாய்ப்பு; வழிகாட்டியாக தோழர் நல்லகண்ணு'' -மு.க.ஸ்டாலின்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு ஐயாவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் 'தோழர் நல்லக்கண்ணு நூறு' என்ற கவிதை புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதையடுத்து பேசியவர், "உங்களது வாழ்த்தை விட எனக்கு பெரிய ஊக்கம் எதுவும் இல்லை. சமத்துவ சமுதாயத்தை மீட்க நமது பணியில் வெல்ல வாழ்த்துங்கள் என்று கேட்பதற்கே வந்துள்ளோம். ஐயா நல்லக்கண்ணுவிடம் வாழ்த்து பெறவே வந்துள்ளேன். பெரியார், கலைஞருக்கு கிடைக்காத வாய்ப்பு தோழர் நல்லகண்ணு ஐயாவுக்குக் கிடைத்துள்ளது. 100 வயதை கடந்தும் அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார். பொதுவுடைமை, திராவிடம், தமிழ்த்தேசிய சிந்தனையாளர்கள் நிறைந்த மேடைஇது.
இயக்கம் வேறு, தான் வேறு என்று நினைக்காமல் வாழ்ந்து வருகிறார். உழைப்பால் கிடைத்த பணத்தை எல்லாம் கட்சிக்காகவே கொடுத்தார். அம்பேத்கர், தகைசால் தமிழர் விருதுக்கு கிடைத்த ரூபாயை கூட தமிழக அரசுக்கு திருப்பி அளித்தார். உயர்நீதிமன்றம் பாராட்டும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்தவர் ஐயா நல்லக்கண்ணு" என்று பேசியிருக்கிறார்.