செய்திகள் :

மாணவி வன்கொடுமை: "FIR வெளியே கசியக் காரணம் இதுதான்..." - தேசிய தகவல் மையத்தின் விளக்கமென்ன?

post image

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட வழக்கின் எப்.ஐ.ஆர் இணையத்தில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

எப்.ஐ.ஆர் கசிந்தது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது. இதுகுறித்து விசாரிக்க மூன்று பெண் ஐ.பி.எஸ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது உயர் நீதிமன்றம். மேலும், சம்பந்தப்பட்ட மாணவிக்கு நஷ்ட ஈடாக ரூ. 25 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை

தற்போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் எப்.ஐ.ஆர் எப்படி வெளியானது என்பது குறித்து தேசிய தகவல் மையம் கூறியுள்ளது.

"எப்.ஐ.ஆரை இந்திய தண்டனை சட்டத்திலிருந்து (IPC) பாரதிய நியாய சன்ஹிதாவிற்கு (BNS) இணையத்தில் மாற்றும்போது தொழில்நுட்ப கோளாறுகளால் அது கசிந்திருக்கலாம்" என்று தெரிவித்துள்ளது.

தேசிய தகவல் மையத்தின் மூத்த இயக்குநர் அருள்மொழி வர்மன், "மாநில குற்றப்பிரிவு ஆவணக் கூடத்தின் வழிகாட்டுதலின் படி, பி.என்.எஸ்.எஸ் 64, 67, 68, 70, 79 பிரிவுகளில் பதியப்படும் வழக்குகள் எப்.ஐ.ஆரை பொதுமக்கள் பார்க்க முடிகிற பக்கத்தில் காட்டாது. ஆனால், இந்த சம்பவத்திற்குப் பின்பு, மாநில குற்றப்பிரிவு ஆவணக் கூடத்தின் எப்.ஐ.ஆர் பக்கத்தை ஒருமுறை சரிபார்க்கத் தேசிய தகவல் மையம் அறிவுறுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/JailMathilThigil

``படத்தை வைத்து திமுக நிர்வாகி என்று சொல்ல முடியாது; சிபிஐ விசாரணை தேவையற்றது'' -அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்... மேலும் பார்க்க

Bhopal: `போபாலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு...' - 337 மெட்ரிக் டன் நச்சுக்கழிவுகளை அகற்றும் ம.பி அரசு!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலில் யூனியன் கார்பைட்' பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலை இருந்தது. 1984-ம் ஆண்டு அங்கிருந்து கசிந்த விஷ வாயுவால் 5,479 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 லட்சத்துக்கும் அதி... மேலும் பார்க்க

பழனி: பூட்டி கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறை; அவதிக்குள்ளாகும் மகளிர்- நடவடிக்கை எடுக்கப்படுமா?

பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையானது பூட்டிய நிலையில் காணப்படுகின்றது. பெண்கள் பணி நிமித்தமாகவும் பயணங்கள் மேற்கொள்ளும் போதும் பேருந்து நிலையத்தில் காத்திருக்கு... மேலும் பார்க்க

Tirupati: ``திருப்பதி தேவஸ்தானத்தில் கோடி கணக்கில் மோசடி!'' - மீண்டும் எழுந்த புகாரால் அதிர்ச்சி

திருப்பதி தேவஸ்தானத்தில் தொலைந்த பொருள்களை சேமித்து வைக்கும் கவுண்டர்களில் ஏகப்பட்ட மோசடிகள் நடப்பதாக திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் மற்றும் பாஜக பிரமுகர் G.பானு பிரகாஷ் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். ... மேலும் பார்க்க

மாநில அளவிலான திருக்குறள் வினாடி - வினா போட்டி; திருப்பூர்‌ ஆசிரியர் குழு முதலிடம்!

குமரி முனையில் வானுயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில், விருதுநகர் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆச... மேலும் பார்க்க

நீலகிரி: இரவில் திடீரென `ரூட்' மாறிய அரசு பேருந்து; பதறிய பயணிகள்! - என்ன நடந்தது?

தனியார் பேருந்துகளுக்கு வழித்தட தடை நடைமுறையில் இருக்கும் நீலகிரியில், சில தனியார் சிற்றுந்துகளைத் தவிர முழுக்க முழுக்க அரசு பேருந்துகளை மட்டுமே மக்கள் சார்ந்துள்ளனர். பள்ளத்தாக்குகளிலும் மலைச்சரிவுகள... மேலும் பார்க்க