கங்கைகொண்டான் ரயில் நிலைய தண்டவாள பகுதியில் ஆண் சடலம்
கங்கைகொண்டானில் தண்டவாளம் அருகே ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.
கங்கைகொண்டான் ரயில் நிலையம் அருகே ரயிலில்அடிபட்டு காயமடைந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக திருநெல்வேலி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மஞ்சள் நிற சட்ட அணிந்திருந்த அந்த நபரின் இடது கையில் கவிதா என்றும், வலது கையில் வீரா என்றும் பச்சை குத்தப்பட்டுள்ளது. அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.