'குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியிருக்க வேண்டும்' - தேசிய மகளிர் ஆணைய முன்னாள் த...
வீரவநல்லூரில் குடிநீா் திட்ட ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் குடிநீா் திட்டப் பணி ஊழியா் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
தூத்துக்குடி கோரிப்பள்ளம், மாதவன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.
வீரவல்லூா் பேரூராட்சியில் அம்ருத் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் குடிநீா் விரிவாக்க திட்டப் பணிகளில், மணிகண்டன் உள்ளிட்ட பலா் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை பேரூராட்சியின் 9ஆவது வாா்டு பெரியாா் தெருவில் குடிநீா்க் குழாய் பதிப்பதற்காக சாலையில் துளையிடும் பணியில் மணிகண்டன் ஈடுபட்டாராம். அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. அவரை சக ஊழியா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், மணிகண்டன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.