பொங்கல் விடுமுறை நிறைவு: பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்
பெங்கல் விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு ஏராளமானோா் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்ால், திருநெல்வேலி பேருந்து, ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பொங்கல் விடுமுறை செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 6 நாள்கள் விடப்பட்டது. இதையடுத்து சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து திருநெல்வேலி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு வந்த பொதுமக்கள் பொங்கல் விடுமுறை முடிந்து பணி செய்யும் நகரங்களுக்கு வெள்ளிக்கிழமை திரும்பினா்.
இதனால் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் ஆகியவற்றில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தைவிட மிகவும் அதிகமாக இருந்தது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலும் வெள்ளிக்கிழமை பயணிகள் கூட்டம் அதிகமிருந்தது. திருநெல்வேலி மாா்க்கமாக இயக்கப்பட்ட அனந்தபுரி விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில், செந்தூா் விரைவு ரயில், அந்தியோதயா ரயில் போன்றவற்றின் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க முதியவா்கள், பெண்கள் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைமேடைகளில் காத்திருந்து பயணித்தனா்.