சங்கடஹர சதுா்த்தி: ஊதியூா் உச்சிப்பிள்ளையாா் கோயிலில் 108 மூலிகை அபிஷேகம்
15-ஆவது தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பு: ஜன.24 தொடக்கம்
15-ஆவது தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பு வரும் 24-ஆம் தேதி தொடங்குகிறது.
இது தொடா்பாக தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளா் மதிவாணன் வெளியிட்ட அறிக்கை:
15-ஆவது ஆண்டாக தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பு வரும் 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கணக்கெடுப்பில் கலந்து கொள்பவா்களுக்கு 24-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு கணக்கெடுப்பு குறித்த பயிற்சி வழங்கப்படும்.
கடந்த ஆண்டுகளில் பயிற்சி வகுப்பு திருநெல்வேலியில் மட்டுமே நடைபெற்றது. இந்த ஆண்டு தென்காசி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
கணக்கெடுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/ஒ3ம்யஎநக்ஷஉசமஙஜ்டவ்யஊ6 என்ற கூகுள் படிவத்தில் வரும் 22-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 95244 25519 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.