விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தொடங்கியது
நீலகிரி: இரவில் திடீரென `ரூட்' மாறிய அரசு பேருந்து; பதறிய பயணிகள்! - என்ன நடந்தது?
தனியார் பேருந்துகளுக்கு வழித்தட தடை நடைமுறையில் இருக்கும் நீலகிரியில், சில தனியார் சிற்றுந்துகளைத் தவிர முழுக்க முழுக்க அரசு பேருந்துகளை மட்டுமே மக்கள் சார்ந்துள்ளனர். பள்ளத்தாக்குகளிலும் மலைச்சரிவுகளிலும் அமைந்திருக்கும் நூற்றுக்கணக்கான மலை கிராமங்களை ஊட்டி, குன்னூர் போன்ற நகரங்களுடன் இணைக்கும் உயிர் நாடியாக இருக்கின்றன அரசு பேருந்துகள்.
இந்நிலையில், ஊட்டியில் இருந்து சுமார் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கொல்லிமலை ஓரநள்ளி கிராமத்திற்கு ஊட்டியில் இருந்து பயணிகளுடன் நேற்றிரவு அரசு பேருந்து ஒன்று சென்றிருக்கிறது. வழியில் பயணிகளை இறக்கிவிட்ட படியே சென்ற அரசு பேருந்தை ஓரநள்ளி அருகில் செல்லும்போது, பாதை தெரியாமல் வேறு பாதையில் இயக்கியிருக்கிறார் ஓட்டுநர். மற்றொரு கிராமத்திற்குச் செல்லும் குறுக்கு பாதையில் பேருந்து செல்வதைக் கண்டு பதறிய பயணிகள், பேருந்தை உடனடியாக நிறுத்தச் செய்துள்ளனர். மீண்டும் பேருந்தை பின்னோக்கி இயக்கி வழக்கமான வழித்தடத்திற்கு பேருந்தைக் கொண்டு வந்து இயக்கியுள்ளனர். ஓட்டுநருக்கு அந்த ரூட் புதிது என்பதால் குழப்பம் ஏற்பட்டதாக போக்குவரத்துத் துறையினர் தெரிவித்துள்ளனர்.