செய்திகள் :

காட்பாடி: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு - சிக்கலில் மகன் கதிர் ஆனந்த்?

post image
வேலூர், காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலையில் இருந்து அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இதே வீட்டில்தான் துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்தும் வசித்து வருகிறார். துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை வீரர்கள் துரைமுருகன் வீட்டின் முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கின்றனர். தி.மு.க-வினரும் குவிந்து வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதேபோல், காட்பாடியில் கதிர் ஆனந்த் நடத்தி வரும் கல்வி நிறுவனங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

அமலாக்கத்துறை ரெய்டு

சோதனையின்போது, அமைச்சர் துரைமுருகனும், எம்.பி கதிர் ஆனந்தும் வீட்டில் இல்லை. இருவருமே சென்னையில் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. துரைமுருகனின் தீவிர ஆதரவாளரான வேலூர் மாநகர தி.மு.க நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் என்பவரும் காட்பாடி பள்ளிக்குப்பம் பகுதியில் வசித்து வருகிறார். அவரின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான இடத்தில் இருந்துதான் ரூ.10.57 கோடி பணத்தை வருமானவரித் துறையினர் கைப்பற்றினர். இதுதொடர்பாக, எம்.பி கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வேலூர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

துரைமுருகன் - கதிர் ஆனந்த்

சமீபத்தில் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஏறக்குறைய 200 ஏக்கரிலான அரசுப் புறம்போக்கு நிலங்களை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து தனியாருக்கு விற்பனைச் செய்துவந்த குற்றச்சாட்டிலும் சிக்கினார் பூஞ்சோலை சீனிவாசன். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ரேடாரிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறார் அவர்.

இந்த நிலையில்தான் அமலாக்கத்துறையினரும் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனாலும், என்னக் காரணத்திற்காக இந்த ரெய்டு படலம் தொடர்கிறது என்கிற உறுதியான தகவல்கள் அமலாக்கத்துறை வட்டாரத்தில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனாலும், இந்த ரெய்டு எம்.பி கதிர் ஆனந்தை குறி வைத்து நடத்தப்படுவதாகவும், அவருக்கு சிக்கல் ஏற்படலாம் எனவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

'விடுதலை ராஜேந்திரனுக்கு பெரியார் விருது, ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருது' - தமிழக அரசு அறிவிப்பு

திருவள்ளுவர் விருது ஆண்டுதோறும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் திருநாள் விருதுகளை பெறும் விருதாளர்களை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது. தேர்வு செய்யப... மேலும் பார்க்க

திருவாரூர்: தொடரும் விபத்து; பாதுகாப்பு குறைபாடு; அவசர கதியில் திறக்கப்பட்டதா தேசிய நெடுஞ்சாலை?!

நாகப்பட்டினம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் (NH83) ஒரு பகுதியான நாகப்பட்டினம் - தஞ்சாவூர் இடையே நான்குவழிச் சாலை அமைக்கப்படும் என கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு அறிவித்து, அதற்காக 600 கோட... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: கட்டி முடித்தும் திறக்கப்படாத நியாய விலைகடை - பொது மக்கள் அவதி!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே அமைந்திருக்கிறது சொரக்காயல்நத்தம் பஞ்சாயத்து. இந்தப் பஞ்சாயத்துக்குட்பட்ட வெள்ளநாயக்கனேரி அருகே பழுதடைந்த கட்டடத்தில் நியாய விலைகடை இயங்கி வந்தது. இந்த நிலைய... மேலும் பார்க்க

China Dam: உலகின் மிகப்பெரிய அணை கட்டும் சீனா; இந்திய - சீனா உறவில் விரிசல் உண்டாகுமா?!

'மீண்டும்...மீண்டுமா' என்பதுபோல உலகின் மிகப்பெரிய அணை கட்டும் பணியை முடுக்கிவிட்டுள்ளது சீனா. இன்றைய தேதியில் உலகின் மிகப்பெரிய அணையாக இருக்கும் 'த்ரீ கார்ஜஸ் டேம் (Three Gorges Dam)' சீனாவில் தான் உள... மேலும் பார்க்க

ED Raid: அமைச்சர் துரைமுருகன் வீடு... அதிகாலை 2.30 மணிக்கு முடிவுக்கு வந்த ரெய்டு - நடந்தது என்ன?

காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகனின் வீட்டில் நேற்று மதியத்தில் இருந்து அமலாக்கத்துறையினர் நடத்திவந்த சோதனை இன்று அதிகாலை 2.30 மணிக்குத்தான் முடிவுக்கு வந்தது.அமைச்சர் துரைமுருகன் சென்னை... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: குவியும் குப்பையால் முகம் சுளிக்கும் வாகன ஓட்டிகள்... தி.மலை நெடுஞ்சாலை அவலம்!

திருப்பத்தூர் மாவட்டம், வெங்கலாபுரம் அருகே உள்ள திருவண்ணாமலை நெடுஞ்சாலையையொட்டி அமைந்திருக்கிறது இந்த இடம். செங்கம், சிங்காரப்பேட்டை, திருவண்ணாமலை செல்வதற்காக இந்த வழியை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருக... மேலும் பார்க்க