Gambhir: ``எல்லோரும் உள்ளூர் கிரிக்கெட் ஆடவேண்டும்; இலையென்றால்..." - BGT தோல்வி...
காலனித்துவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் வேலு நாச்சியார்: பிரதமர் மோடி!
வேலு நாச்சியார் பிறந்த நாளுக்கு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தில் முக்கிய பங்கு வகித்த இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை என்று அழைக்கப்படும் வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த நாள் இன்று(ஜன. 3) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், "தையரியம்மிக்க ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்வோம். ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக வீரப் போராட்டத்தை நடத்தியவர். ஈடு இணையற்ற வீரத்தையும், புத்தாலித்தனத்தையும் அவர் வெளிக்காட்டினார்.
இதையும் படிக்க: வேலு நாச்சியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!
அடக்குமுறைக்கு எதிராகவும், சுதந்திரத்திற்காகப் போராடுவதற்கும் வருங்கால தலைமுறையினரை ஊக்குவித்தவர். பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக வேலு நாச்சியாரின் பங்களிப்பு போற்றத்தக்கது." என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பனையூரில் உள்ள அலுவலகத்தில் வேலு நாச்சியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.